தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 27 மார்ச், 2015

112 ஆண்டுகளாக எரியும் உலகின் மிக வயதான மின்விளக்கு...!


112 ஆண்டுகளாக எரியும் உலகின் மிக வயதான மின்விளக்கு...!
மின் விளக்கின் ஆயுட்காலம் சராசரியாக 1000 மணி நேரங்கள் (41.6667 நாட்கள்). ஆனால் அமெரிக்காவின் வட கலிபோர்னியாவில் உள்ள தீ அணைப்பு நிலையத்தில், 110 ஆண்டுகளையும் கடந்து ஒரு மின்விளக்கு இன்றும் எரிந்து கொண்டிருக்கிறது.
அடோல்ப் சைலெட் என்ற அமெரிக்கர் இந்த விளக்கை உருவாக்கினார். விளக்கை உருவாக்க எடுத்துக் கொண்டு காலம் 2.4 வருடங்கள்.
1901 ல் எரியதொடங்கிய இந்த மின் விளக்கு இன்றுவரை எந்தத் தங்குதடையும் இல்லாது எரிந்து கொண்டிருக்கிறது.
இனி இதைப் போன்ற விளக்கை எவராலும் உருவாக்க முடியாது என்று சவால் விடுத்ததோடு, விளக்கை உருவாக்கிய குறிப்புகளையும் எரித்து விட்டார் அடோல்ப் சைலெட்.
களத்தில் இறங்கிய அமெரிக்க ஆய்வுக்குழு ஒன்று, தன் ஆராய்ச்சியில் இன்றுவரை வெற்றி பெறவில்லை....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக