தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 21 ஏப்ரல், 2014

சுவிஸிற்கு சுற்றுலா செல்வதற்கான ஐந்து அம்சங்கள்!

பிற நாடுகளை ஒப்பிடுகையில் சுவிஸ் நாட்டிற்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இந்நாட்டிற்கு சுற்றுலா பயணிகள் குவிவதற்கான காரணங்கள் இதோ,
1.பெர்ன் நகரில் உள்ள Bundeshaus (பாராளுமன்ற கட்டிடம்)
சுவிஸ் பாராளுமன்றதிற்கு யாரு வேண்டுமானாலும் செல்லாம். மேலும், பார்வையாளர்கள் இங்கு இலவசமாக அனுமதிக்கப்படுகிறார்கள். இதில் சிற்பங்கள், சுவர் ஓவியங்கள் மற்றும் சில கம்பீரமான அறைகள் மூலம் சுவிஸ் வரலாற்றை விவரிக்கிறது.
2. மலையேற்றம் மற்றும் நடைபயிற்சி செய்ய எற்ற இடம்:
மலைகளும், பள்ளத்தாக்குகளும், பிரம்மாண்டமான ஏரிகள் மற்றும் காடுகள் போன்ற நம்பமுடியாத இயற்கை சூழலானது அனைவரையும் நடைபயிற்சி செய்ய தூண்டும்.
3.தேவாலயங்கள்
நகரின் அனைத்து முக்கிய பகுதிகளிலும் தேவாலயங்கள் உள்ளன, உயரமான தூண்கள், அமைதியான சுற்றுசுழல், கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் சிற்பங்கள் என அனைதும் வியப்பில் ஆழ்த்துகின்றன.
4.ஜெனீவாவில் இலவச போக்குவரத்து
இது மிகவும் நம்பமுடியாத உண்மை தான். ஜெனீவாவில் பொது போக்குவரத்து சுற்றுலா பயணிகளுக்கு இலவசம். தங்கியிருக்கும் விருந்தினர் மாளிகையிலயே இலவச போக்குவரத்து சீட்டு வழங்கப்படுகிறது.
அந்த சீட்டை அனைத்து பேருந்து மற்றும் டிராமில் பயன்படுத்தலாம்.
5. இலவச குடிநீர்
சுவிஸில் பொது குடிநீர் குழாய்கள் மற்றும் தண்ணீர் நீரூற்றுக்களிலும் தண்ணீர் கிடைக்கும். குடிநீரின் சுவை சுவிட்சர்லாந்தில் குடித்த பின் தான் அறிய முடியும் என்பது குறிப்பிடதக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக