அமெரிக்காவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் நான்கில் மூன்றுபேருக்கு உண்மை வயதைக்காட்டிலும், அவர்களது இதயத்துக்கு ஐந்து வயது அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
பர்மிங்ஹாம் இதய ஆய்வு நிறுவனம் அமெரிக்காவின் ஒவ்வொரு மாநிலத்திலும் இதயத்தின் வயது குறித்து ஆய்வு நடத்தியது.
இதில், அமெரிக்காவின் தென்பகுதியில் இருக்கும் மிசிசிப்பி, மேற்கு விர்ஜீனியா, லூசியானா, கென்டக்கி மற்றும் அலபாமா ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அவர்களது வயதைக் காட்டிலும் இதயத்தியற்கு அதிக வயதாகியிருப்பது தெரியவந்துள்ளது.
இதற்கு நேர்மறையாக உட்டா, கோலராடோ, கலிபோர்னியா, மாஸாச்சூசெட்ஸ் மற்றும் ஹவாய் பகுதிகளில் இதயத்தின் வயது அவர்களின் வயதைவிட குறைவாகவே உள்ளது.
அதிலும் குறிப்பாக கருப்பின ஆண் மற்றும் பெண்களுக்கு இதயத்தின் வயது மிகமிக அதிகமாக உள்ளது.
கருப்பின பெண்களுக்கு சராசரியாக ஐந்து முதல் ஏழு வயது அதிகமானதாக, மற்ற இன பெண்களைக் காட்டிலும் உள்ளது. அதேபோல, கருப்பின ஆண்களுக்கு சராசரியாக மூன்று முதல் நான்கு வயது அதிகமாக உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதயத்தின் வயதை அதிகரிப்பது புகைப்பிடித்தல், ரத்த அழுத்த அளவீடு மற்றும் உடல் எடை போன்றவையே காரணமாக உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக