தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 4 செப்டம்பர், 2015

ஒரு பக்கம் கொழுப்பை கரைக்கிறது...மறுபக்கம் அழகு தருகிறது: தேங்காயின் ரகசியம்!



தேங்காய் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல நமது தேகத்தை அழகாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.
தேங்காய் தரும் ஆரோக்கியம்:
தேங்காயில் உள்ள “ஃபேட்டி ஆசிட்” (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது.
தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.
தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக்.
தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.
மாதவிடாய் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து.
தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது.
தேங்காய் எண்ணெய் உரிய அளவு தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும் என்று அண்மைக் கால ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளன.
தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது.
தேகத்திற்கு தரும் அழகு
வழுக்கை தேங்காயை நன்கு அரைத்து, அதனோடு சிறிதளவு இளநீர் கலந்து முகத்தில் கீழ் இருந்து மேல்நோக்கி பூசி, அது உலர்ந்ததும் நீர் கொண்டு சுத்தம் செய்யவேண்டும்.
தினமும் இப்படி செய்தால் மாசு மருவின்றி முகம் மிளிரும். கரும் புள்ளிகள் இருந்தால் காணாமல் போய்விடும். வெயில் காலங்களில் சூரியஒளி பட்டு முகம் கருப்பாவது வழக்கம்.
முகம் கருப்பாவதை தடுக்கவும் தேங்காய் உதவுகிறது. தேங்காய் பால் 2 ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து, இரண்டையும் கலந்து பசைபோல ஆக்கிக்கொள்ள வேண்டும்.
இந்த பசையை முகத்தில் பூசிக்கொண்டு, உலர்ந்ததும் தண்ணீர் கொண்டு கழுவிவிட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக