தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 4 செப்டம்பர், 2015

உண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா?


ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா? ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்லாமிய சட்டத்திட்டத்தின் படி ஹலால் உணவை மட்டுமே சாப்பிட வேண்டும். பலரும் ஹலால் என்றால் சுத்தம் என்று நினைக்கிறோம். ஆனால் அது தான் தவறு. ஹலால் என்பதன் உண்மையான அர்த்தமே வேறு. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், ஹலால் என்பது உணவுக்காக கொல்லப்படும் விலங்குகளின் கொல்லும் முறையைக் குறிக்கும். அந்த முறையின் படி உண்ணும் விலங்குகள் கொல்லப்பட்டால் மட்டுமே இஸ்லாமியர்கள் அந்த இறைச்சியை உண்பார்கள். புரியவில்லையா? சரி, இதனைப் பற்றி விரிவாக காண்போம் வாருங்கள்.

ஹலால் என்றால் என்ன? ஹலால் என்பது உண்ணும் விலங்குகளை வெட்டும் போது அதன் கழுத்துப் பகுதியானது முழுமையான அறுபடாமல், வலியை உணரச் செய்யும் மூளைக்கு செல்லும் நரம்பு வரை அறுப்பதாகும். முக்கியமாக இந்த முறையில் வெட்டும் முன்பு, 'பிஸ்மில்லாஹி வல்லாஹு (அல்லாஹும்ம மின்க-வலக) அல்லாஹும்ம தகபல் மின்னி' என்று கூறி பின் வெட்டுவார்கள்.

என்ன நன்மை? ஹலால் முறையில் கால்நடைகளை அறுக்கும் போது, கால்நடைகளில் உடலில் உள்ள அனைத்து ரத்தமும் வெளியேற்றப்படும். இதனால் இரத்தத்தின் மூலம் நோய்க்கிருமிகள் பரவுவது தடுக்கப்படும்.

கூர்மையான கத்தி ஹலால் முறையில் அறுக்கப் பயன்படும் கத்தி மிகவும் கூர்மையாக இருக்க வேண்டும். மேலும் அறுக்கும் போது கால்நடைகள் வலியை உணராதவாறு அல்லது குறைவான வலியை உணருமாறு மிகவும் வேகமாக அறுக்க வேண்டும்.


நரம்பு மண்டலம் அறுபடக்கூடாது ஹலால் முறையில் வெட்டும் போது கால்நடைகளின் மூச்சுக்குழாயும், இரத்தக்குழாயும் ஒரே நேரத்தில் அறுக்கப்பட்டு உயிரிழக்கச் செய்ய வேண்டும். முக்கியமாக இப்படி செய்யும் போது கால்நடைகளின் நரம்பு மண்டலம் வெட்டப்படாமல் இருக்க வேண்டும்.

தண்டுவடம் அறுபடக்கூடாது ஹலால் முறையில் வெட்டும் போது, கால்நடைகளின் தண்டுவடம் துண்டிக்கப்படால் இருக்க வேண்டும். ஏனெனில் தண்டுவடம் துண்டிக்கப்பட்டால், இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்கள் பாதிப்பிற்குள்ளாகி இதயத்தின் செயல்பாடு நின்று போகும் நிலை ஏற்படும். இப்படி இதயம் நின்றுபோனால், இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைப்பட்டு அங்கேயே தங்கிவிடக்கூடும்.

இரத்தம் வெளியேற்றப்படவும் பொதுவாக உடலில் கிருமிகள் உருவாதற்கு காரணம் இரத்தம் தான். ஆனால் ஹலால் முறையில் இரத்தம் முழுவதும் வெளியேற்றப்படுவதால், கால்நடைகளின் மூலம் எவ்வித கிருமிகளும் உடலினுள் நுழையாது.

விரைவில் கெட்டுப் போகாது ஹலால் முறையில் கால்நடைகளை வெட்டுவதால், இறைச்சி விரைவில் கெட்டுப் போகாமல், நீண்ட நேரம் இருக்கும். இதற்கு காரணம், வெட்டும் போது கால்நடைகளின் இரத்தம் இறைச்சியில் கலந்துவிடாமல் இருப்பது தான்.

கால்நடைகளுக்கு வலி ஏற்படுவதில்லை சாதாரணமாக கால்நடைகளைக் கொல்லும் போது அவைகளுக்கு மிகுந்த வலி ஏற்படும். ஆனால் ஹலால் முறையில் வெட்டும் போது, வலியை உணர வைக்கும் நரம்பு முதலில் வெட்டப்படுவதால், அவை வலியை உணர்வதில்லை.


வெட்டும் போது கால்நடைகள் ஏன் துடிக்கிறது? ஹலால் முறையில் வெட்டும் போதும் கால்நடைகள் துடிப்பதற்கு காரணம், வலி அல்ல. உடலில் இருந்து அனைத்து இரத்தமும் வெளியேற்றப்படுவதால், தசைகள் சுருங்கும் போது, கால்நடைகள் துடிப்பது போன்றும், துள்ளுவது போன்றும் நமக்கும் தெரிகிறது.

ஆய்விலும் உறுதி இதனை உறுதி செய்யும் விதமாக மேற்கொண்ட ஆய்வில், ஹலால் முறையில் வெட்டிய கால்நடைகள், மற்ற முறையில் வெட்டப்பட்ட கால்நடைகளை விட மிகக்குறைந்த அளவிலேயே வலியை உணர்வதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

http://tamil.boldsky.com/insync/pulse/2015/what-is-halal-009196.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக