ஜேர்மனியில் வரும் 2015ம் ஆண்டு 230,000 என்ற எண்ணிக்கையில் தஞ்சம் கோரும் அகதிகளின் வருகை இருக்கலாம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியில் ஏற்கனவே எண்ணற்ற அளவில் இருக்கும் அகதிகளை கையாளமுடியாமல் அதிகாரிகள் போராடிவரும் நிலையே உள்ளது.
இந்நிலையில் வரும் புத்தாண்டில் இப்போது இருக்கும் எண்ணிக்கையைவிட, 230,000 நபர்கள் புதிதாக தஞ்சம் கோரி அகதிகளாக வரவாய்ப்புள்ளதாக குடியேறுவோர் மற்றும் அகதிகளின் மத்திய அலுவலக அதிகாரி மேன்ஃபிரட் ஷ்மிட் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவிலேயே ஜேர்மனி தான் தஞ்சம் கோருவோருக்கு சிறந்த இடமாக விளங்குவதாக தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நடப்பு ஆண்டான 2014ல் கடந்த ஆண்டை விட 60 சதவிகிதம் அதிகமாக அதாவது 200,000 அகதிகள் தஞ்சம்கோர விண்ணப்பிப்பார்கள் என்று எண்ணப்பட்ட வேலையில், அதைவிட அதிகளவில் விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடக்கும் போரினால் கடந்த சில ஆண்டுகளாக ஜேர்மனியில் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டேவுள்ளது.
மேலும், இதனால் ஜேர்மனி அதிகாரிகள் அதிக அளவிலான அகதிகளை சமாளிக்கவும் அவர்களுக்கு தேவையான சேவைகளையும் செய்ய முடியாமல் திணறி வருவதாக தெரியவந்துள்ளது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக