தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 24 டிசம்பர், 2014

சோனி பிக்ஸர்ஸ் நிறுவனத்தின் அச்சுறுத்தலை எதிர்நோக்கும் டுவிட்டர்!

உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டரின் மீது வழக்கு தொடரப்போவதாக சோனி பிக்ஸர்ஸ் என்டர்டெயின்மென் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அண்மையில் சோனி பிக்ஸர்ஸ் நிறுவனத்தின் கணனிகள் சைபர் தாக்குதலுக்கு இலக்காகியதன் பின்னரே இந்த அச்சுறுத்தல் டுவிட்டருக்கு விடுக்கப்பட்டுள்ளது.
அதாவது டுவிட்டர் தளத்தில் சோனி நிறுவனத்தின் சில மின்னஞ்சல் முகவரிகளின் ஸ்கிரீன் ஷாட்டினை Val Broeksmit என்பவர் @BikiniRobotArmy எனும் டுவிட்டர் பயனர் பெயரிலிருந்து வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு மின்னஞ்சல் முகரிகளை வெளியிட்டவர்களின் டுவிட்டர் கணக்குகளை தடை செய்யக்கோரிக்கை விடுத்துள்ள சோனி பிக்ஸர்ஸ், அவ்வாறு செய்ய தவறும் பட்சத்தில் வழக்கு தொடரப் போவதாக எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக சோனி பிக்ஸர்ஸின் சட்டத்தரணியான David Boies அனுப்பிய கடிதத்தில் “சமூகவலைத்தளங்களில் தனிப்பட்ட தகவல்கள் பரிமாறப்படுவது நிறுத்தப்பட வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இக் கடிதத்தினை அமெரிக்க இணையத்தளமான Motherboard  தனது தளத்தில் பிரசுரித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக