தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 18 டிசம்பர், 2014

குளு குளுக்கவைக்கும் குன்றுகளின் ராணி!


குன்றுகளின் ராணி, கோடை காலப்புகலிடம் என்று பல பெயர்களோடு அழைக்கப்படும் சிம்லா, அதிகளவில் சுற்றுலாப்பயணிகளை கவர்ந்த வண்ணம் உள்ளது.
எத்தனை முறை சென்றுவந்தாலும், சலிக்காமல் மீண்டும் சுற்றுலாப்பயணிகளை அழைக்கிறது இந்த சிம்லா.
இமாசலப்பிரதேசத்தில் தலைநகரமாக விளங்கும் சிம்லா புகழ்பெற்ற பனிச்சறுக்குக்களமாகும். குளிர்காலத்தில் இந்த இடம் முழுவதும் பனியால் மூடப்பட்டிருக்கும் மேலும் இது பனிச்சறுக்கு விளையாட்டிற்கு உகந்த நேரமாக உள்ளது.
மலையேற்றமும் இங்கு பிரபலமாக உள்ளது. ஜுங்கா, செயில், சுர்தார், ஷாலி பீக், ஹட்டு பீக் மற்றும் குல்லு போன்ற இடங்கள் சிம்லாவுடன் பல்வேறு வழிகளில் இணைக்கப்பட்டுள்ளன.
சுற்றுலா பயணிகள் இரு சக்கர வாகனத்தின் மூலம் (mountain biking) சிம்லாவிலிருந்து நல்தேரா மற்றும் சலோக்ராவை சுற்றிப்பார்க்கலாம். பியாஸ், ராவி, செனாப் மற்றும் ஜீலம் போன்ற நதிகள் பார்வையாளர்களுக்கு படகு செலுத்தும் வாய்ப்பை வழங்குகிறது.
சிம்லா, ஆகாய,சாலை மற்றும் ரயில் போன்ற முக்கிய போக்குவரத்து வழிகள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
சிம்லாவின் மிக நெருக்கமான விமான தளமாக ஜுப்பர்ஹட்டி விமான நிலையம் (Jubbarhatti Airport) விளங்குகிறது.
இந்த விமான தளத்திற்கு இந்திரா காந்தி விமான நிலையத்திலிருந்து அடிக்கடி விமானங்கள் உள்ளன.
சுற்றுலா பயணிகள் கால்கா ரயில் நிலையத்தின் மூலமும் இலக்கை அடையலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக