தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 31 டிசம்பர், 2014

2014- வியக்க வைத்த தொழில்நுட்பங்கள்

உலகில் பல மாற்றங்கள் வருவதற்கு காரணமே தொழில்நுட்பம் தான்.
வேறு மாற்றங்கள் நிகழ்கின்றனவோ இல்லையோ, தொழில்நுட்பத்தில் மட்டும் புதுப் புது மாற்றங்கள், வளர்ச்சிகள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
அந்த வகையில் 2014ம் ஆண்டில் தொழில்நுட்ப வரவுகள் ஒரு பார்வை.

கைப்பேசி
இன்றைய உலகில் கைப்பேசி இல்லாவிட்டால் பூமி சுற்றாது என்று சொல்லும் அளவுக்கு மனிதர்களின் வாழ்க்கையில் முக்கிய இடம்பிடித்துவிட்டது.
இதன் அபார வளர்ச்சி இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரையுமே கட்டிப் போட்டு விட்டது.
அந்த வகையில் ஐபோன் 6 சந்தையில் பெரும் வரவேற்பை பெற்றது, மேலும் ஸ்மார்ட் கைப்பேசிகளின் மூலம் கட்டுப்படுத்தப்படும் ரோபோக்களும்அறிமுகமாகி சந்தையை கலக்கின.

கணனிகள்
கைப்பேசிகளுக்கு அடுத்த இடத்தை பிடிப்பது கணனிகள் மற்றும் டேப்லட்கள் தான்.
2014ம் ஆண்டில் ஒவ்வொரு நிறுவனமும் போட்டிப் போட்டுக் கொண்டு கணனி மற்றும் டேப்லட் தயாரிப்பில் களமிறங்கின.
குறிப்பாக சம்சுங் நிறுவனம் உலகின் மிகப்பெரியதும், 110 அங்குல அளவுடையதுமான தொலைக்காட்சியினை அறிமுகம் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
மேலும் சோனி நிறுவனம் வளைந்த தொலைக்காட்சியை அறிமுகம் செய்தது.

கார்
2014ம் ஆண்டில் சந்தைக்கு புதுவரவாக ஏராளமான நிறுவனங்கள் தங்கள்கார்களை அறிமுகப்படுத்தின.
அதில் FT-1, ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் எக்ஸென்ட், டொயோட்டா எட்டியோஸ் கிராஸ், ஹோண்டா மொபிலியோ, ஃபியட் புன்ட்டோ எவோ, ஹூண்டாய் எலைட் ஐ20, டாடா ஸெஸ்ட், மாருதி சியாஸ் ஆகியவை மக்களால் பெரிதும் விரும்பி வாங்கப்பட்டன.

ஸ்மார்ட் வாட்ச்
தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியின் விளைவாக கைக்கடிகாரத்திலும் பல்வேறு புரட்சிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
முக்கியமாக ஸ்மார்ட் கடிகாரங்கள் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தன.
உதாரணத்திற்கு Polar V800 Triathlon, Blub Tube Clock, Watch-Me போன்ற கடிகாரங்களை குறிப்பிடலாம்.

ஆராய்ச்சி
மருத்துவ ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும் இந்த ஆண்டு வெளியான ஆய்வு முடிவுகள் வியப்பை ஏற்படுத்தின.
குறிப்பாக சந்திரனில் வீடுகள் கட்டுவது குறித்த நாசாவின் அறிவிப்பு, புற்றுநோயை அழிக்கும் நானோ ரோபோடிக்ஸ் என்ற சிகிச்சை முறை மற்றும் சூரியனை விட மிகப்பெரிய மஞ்சள் நட்சத்திரம் ஆராய்ச்சிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றது என்றே சொல்லலாம்.
Last update: 2014-12-31 10:55:15
 
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக