தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 27 டிசம்பர், 2014

2014 உயர்தரப் பரீட்சையில் முதல் இடம்பெற்ற பெற்றவர்களின் முழு விபரம்!!

2014 உயர்தரப் பரீட்சையில் முதல் இடம்பெற்ற பெற்றவர்களின் முழு விபரம்
[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 04:25.22 PM GMT ]
2014ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் முதல் இடத்தில் சித்தியெய்தியவர்களின் முழுமை விபரங்கள் வெளியாகியுள்ளன.
இதன் அடிப்படையில் கணிதப் பிரிவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பாக்கியராஜ் டாருகீசன், உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் மாத்தறை சுஜாதா கல்லூரியின் ஹிருனி உதார ஆகியோர் முதல் இடத்தில் சித்தியெய்தியுள்ளனர்.
கலைப் பிரிவில் கொழும்பு விசாகாவின் ஷாவினி நெத்சலா பத்திரன, பொது பாடவிதானத்தில் மியூஸியஸ் வித்தியாலயத்தின் நிபுணி டயஸ் நாகவத்த, வர்த்தகப் பிரிவில் காலி தெற்கு மகளிர் வித்தியாலயத்தின் யு ஜி. பியூமி தனஞ்செ ஆகியோர் தேசிய ரீதியில் முதல் இடம்பெற்றுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRbKagx6.html

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகின- யாழ். இந்துக் கல்லூரி மாணவன் கணிதப் பிரிவில் தேசிய ரீதியில் முதலிடம்
[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 12:54.01 PM GMT ]
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று பிற்பகல் வெளியாகியுள்ளது என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைப் பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் http://www.doenets.lk/என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். இந்துக் கல்லூரி மாணவன் கணிதப் பிரிவில் தேசிய ரீதியில் முதலிடம்
இன்று பிற்பகல் வெளியாகிய க.பொ.த. உயர்தரப் தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் கணிதப் பிரிவில் 3 ஏ சித்திகளைப் பெற்று தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்
யாழ். இந்துக் கல்லூரி மாணவன் பாக்கியராஜா டாருகீசன்  என்ற மாணவனே முதலிடம் பெற்றுள்ளார்.
இதேவேளை கணிதப் பிரிவில் தேசிய ரீதியில் 8ஆம் இடத்தையும் யாழ். இந்து மாணவன் ஒருவர் பெற்றுள்ளார்.
கணிதப் பிரிவில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற டாருகீசனை லங்காசிறி இணையத்தளம் வாழ்த்துகின்றது.
கிளிநொச்சி மத்திய கல்லூரி கணித,விஞ்ஞான பிரிவுகளில் மாவட்ட நிலையில் முதலிடம்!
கிளிநொச்சி மாவட்டத்தில் கிளி/மத்திய கல்லூரி மாணவர்கள் இருவர் கணிதப்பிரிவில் முதலாம், இரண்டாம் இடங்களைப் பெற்றுள்ளனர்.
மாவட்ட நிலையில் கு.கதீஸ்(3ஏ) முதலாம் இடத்தையும் கா.சங்கீர்த்தனன் (2ஏ,பி) இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
அத்துடன் விஞ்ஞானப்பிரிவில் மாவட்ட நிலையில் முதலாமிடத்தை இதே பாடசாலை மாணவர் இராமமூர்த்தி ஜனத் (3ஏ) பெற்றுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRbKagxy.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக