உலகில் உள்ள காடுகளிலேயே மிகப்பெரியதும் அடர்த்தியானதும் அமேசான் காடு தான். அமேசான் என்ற பெயருக்கு நல்ல உயரமான திடகாத்திரமான பெண் என்று பொருள்.
நதிகளின் ராணி என்று அழைக்கப்படும் அமேசான் நதி 6 ஆயிரத்து 712 கிலோ மீட்டர் நீளம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாபெரும் நதியினை சூழ்ந்திருக்கும் அமேசான் காடு பிரேசில், கொலம்பியா, வெனிசுலா உள்பட 8 நாடுகளை எல்லைகளாக கொண்டுள்ளது.
சுமார் 25 லட்சம் சதுர மைல்கள் பரப்பளவு கொண்ட இதில் தான், பூமிப்பந்தின் மொத்த பிராண வாயுவில் 20 சதவீதம் உற்பத்தியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதுமட்டுமல்லாமல், உலகப்பறவை இனங்களில் மூன்றில் ஒரு பங்கு இங்கும், உலகில் உள்ள ஒரு கோடிக்கும் மேலான உயிரினங்களில் அதாவது தாவரம், விலங்கு, பூச்சி போன்றவற்றில் அமேசான் காடுகளில் மட்டுமே 50 லட்சத்துக்கும் மேல் இருக்கின்றன என்பதும் மலைக்கவைக்கும் உண்மை.
2 ஆயிரத்து 500 வகை மீன்கள், 1,500 வகை பறவைகள், 1,800 வகை வண்ணத்துப்பூச்சிகள், 200 விதமான கொசுக்கள் என பல்லுயிர் பெருக்கத்தின் முக்கிய இடமாக அமேசான் அமைந்துள்ளது.
இந்த காட்டுபகுதியில், 20 ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் பழங்குடியினர்களில் 215 பழங்குடி குழுக்களை சேர்ந்த மக்கள் 170 வகையான மொழிகள் பேசுகிறார்கள்.
மேலும், இந்த காடு மற்றும் நதியின் ஆயுள் கிட்டத்தட்ட 5.5 கோடி வருடங்கள் என்பது ஆச்சர்யபடவைக்கும் உண்மை.
இந்த அமேசான் நதி பிறக்கும் இடத்தில் இருந்து, சுமார் 1,100 துணை நதிகளை தன்னோடு இணைத்துக்கொண்டு கடலில் சென்று சேருகிறது.
மேலும், இங்கு இருக்கும் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட பல வகை வகையான தாவரங்களை இன்றும் உலகத் தாவரவியல் வல்லுநர்களே படித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக