தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, December 27, 2014

ஈழம்பற்றிய ஒரு எனது தேடலில் தரவுகள்!!


ஹெல என்பதை விட எலு என்பதில் எனக்கு அதிகம் ஆர்வம் இருந்தது. இதைத் தேடியபோது கிடைத்த தகவலை இங்கு தருகிறேன். ஈழம் என்றால் உலோகக்கட்டிகள் தங்கம் எனப்பலவாகப் பொருள் படும் ஈழம் என்ற பெயர்வந்தமைக்கான காரணங்களை ஆசிரியர் முதலியார் செ. இராசநாயகம் கலாநிதி செங்கையாளியன் போன்றோர் இப்படிக்கருதுகிறார்கள். ஈழு என்ற ஒரு நிறைவற்ற மொழி திரிபடைந்து எலு என்றானது என்றும் இந்த ஈழு என்பது ஈழம் ஈழமண்டலம் எனப்பெயர் கொண்டது என்றும் ஈழம் சீலம் என மருவி சிஹழம் பின் சிங்களம் என்றானது என்றும் துணிகிறார்கள்.

ஈழம் என்ற பெயர்த் தோற்றம் பற்றிப் பொதுக் கருத்து இல்லை இது பற்றிய வாதங்களும், எதிர்
வாதங்களும் இன்னும் தொடர்ந்து வருகின்றன. ஈழம் என்ற பெயர் இத் தீவைக் குறிக்கும் பாளிமொழிச் சொல்லான 'சிஹலம்' என்பதிலிருந்து திரிந்தது எனக் கிருஷ்ணசாமி ஐயங்கார் போன்றவர்கள் கருதினார்கள். வேறு சிலரோ ஈழம் என்ற சொல்லே 'சிஹலம்' என்று திரிபடைந்தது என்பர்

ஈழம் என்னும் சொல் கீழம் என்பதன் மற்றொரு வடிவம் [1] இதனை மரூஉ என்றும் கொள்ளலாம். “கீழ் என் கிளவி உறழத் தோன்றும்” என்பது தொல்காப்பியம். [2] கீழ் என்னும் சொல் இரண்டு பொருளில் வரும். ஒன்று தாழ்வைக் குறிக்கும். மற்றொன்று கிழக்குத் திசையைக் குறிக்கும். தமிழ்நாடு பொதுவாகப் பார்த்தால் கிழக்கில் தாழ்ந்த நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. தாழ்வை இழிவு என்கிறோம். இது மனப்பாங்குப் பார்வை. நிலச்சரிவுப் பார்வையில் இலங்கை தமிழ்நாட்டின் சரிவாக உள்ளது. நீரிழிவு என்னும்போது இழிவு என்னும் சொல் இறங்குதலைக் குறிக்கிறது. இழிவு < > ஈழ் < ஈழம். இது தமிழர் வழங்கிய தமிழ்சொல்.

ஈழவர்களைப் பல்லவர்களாகத் துணிகின்றனர். லெமூரியா அல்லது குமரிக்கண்டம் என்று அழைக்கப்படும் நிலப்பகுதி கடலிரிப்பு கடற்கோள்களால் பாதிக்படைந்த தாழ்நிலமாகும் அதன்படியும் வரைபடங்களிலும் உய்துணர்ந்தால் தொண்டை நாட்டை அண்டிய பகுதியே இலங்கை அமைந்திருந்தது. கடற்கோளால் காவிவரப்பட்டு இழந்திரையன் ஈழவன் என்றே துணிய முடிகிறது. இவன் பிள்ளைப்பேறற்ற தொண்டைநாட்டு அரசானால் வளர்க்கப்பட்டான். பெயற்று இருந்த குழந்தையை இளந்திரையன் என்று பெயரிட்டு வளர்ந்தனர். கடல்திரை அதாவது நுரைகளில் இருந்து பெறப்பட்டவன் என்றாகிறது. இந்த இளந்திரையன்தான தொண்டைநாட்டை பலம்கொண்டு வல்லரசு ஆக்கினான் சோழர்களுடன் பொருதினான் என்கிறது வரலாறு

நோர்வே நக்கீரா


Jananie Theepan அண்ணை ஈழப்போராட்டம் மறைவுக்கு...... இது நல்ல உதாரணம் .......... ஒருவன் உன்னை கழுதை என்றாள் நீ அதை அசட்டை செய் ..... நாலுபேர் நீ கழுதை என்றாள் நீ பொதிசுமந்தே ஆகவேணும்...... அதே பொதியை அதிகமாக செலுத்திவிட்டார்கள் தமிழுக்கு..

நோர்வே நக்கீரா தீபன் நன்றாகச் சொன்னீர்கள். மேலே என்தேடலின் மிகச்சிறிய அறிந்த ஈழம்பற்றிய தகவலைக் கொடுத்துள்ளேன். இலங்கையின் அடிப்படைப்பிரச்சனை தமிழர்கள் சிங்களவர்கள் வரலாறு என்று எதுவுமே இல்லை. பிரச்சனையே அரசியல்வாதிகள் தான். எமக்கும் சிங்களவர்களுக்குமான பொதுமை அதிகம் உள்ளது. அதைப்புரிந்து ஒருபொருமையில் இருந்து ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப எந்த அரசியல்வாதியும் விரும்பவில்லை என்பதே உண்மை. பொதுமை மறுக்கப்படும்போது பொதுநாடு எப்படிச்சாத்தியம்? தமிழர்பக்கத்திலுள்ள மிகப்பெரிய தவறு உணர்ச்சி அரசியல் உண்மை அரசியல் அல்ல. இவ்வளவு அழிவுக்குப்பின்னரும் உணர்ச்சி அரசியல்தானே செய்கிறார்கள். எம்மால் முடிந்ததைச் சொல்லலாம் கெடுகிறேன் பிடி பந்தயம் என்றால் என்ன செய்யமுடியும்

Nada Rajah ஈலாம் (Elam) இன்றைய தென் மேற்கு ஈரானில் செழித்திருந்த பண்டைக்கால நாகரிகம் ஒன்றைக் குறிக்கும். இன்றைய ஈரானின் தூர மேற்கு, தென்மேற்கு ஈரான் ஆகியவற்றை மையப்படுத்தி அமைந்திருந்த இது, குசெசுத்தான், ஈலம் மாகாணம் ஆகியவற்றின் தாழ்நிலப் பகுதிகளிலிருந்துகெர்மான்மாகாணத்தில் உள்ள சிரோஃப்ட் (Jiroft), எரிந்த நகரமான சபோல் (Zabol) என்னும் இடங்கள் வரை பரந்திருந்ததுடன், தென் ஈராக்கின் சிறிய பகுதியொன்றையும் உள்ளடக்கி இருந்தது. பண்டைய அண்மைக் கிழக்குப் பகுதியின் முதன்மையான் அரசியல் சக்திகளில் ஒன்றாக ஈல அரசுகள் விளங்கின.[1]
பண்டைய மெசொப்பொத்தேமியாவுக்குச் சற்றுக் கிழக்கே அமைந்திருந்த இந்தப் பகுதி அக்கால நகராக்கத்தின் ஒரு பகுதியாகவும் அமைந்தது. கிமு 3000 ஆண்டளவில் தொடங்கிய எழுத்துப் பதிவுகளும் மெசொப்பொத்தேமிய வரலாற்றுக்கு இணையாகவே அமைந்தன. நடு வெண்கலக் கால ஈலம்அன்சானை (Anshan) மையமாகக் கொண்டு ஈரானியச் சமவெளியிலும், பின்னர் கிமு இரண்டாவது ஆயிரவாண்டில் இருந்து குசெசுத்தான் தாழ்நிலப் பகுதியில் இருந்த சூசாவை மையமாகக் கொண்டும் அமைந்திருந்தது.[2] இதன் பண்பாடு, குட்டியப் பேரரசில், சிறப்பாக ஆக்கிமெனிட் வம்சக்காலத்தில், முக்கிய பங்காற்றியது. அக்காலத்தில் ஈல மொழி பேரரசின் அலுவல் மொழிகளில் ஒன்றாக இருந்தது.
ஈல மொழிக்கு வேறு எந்த மொழியுடனும் உறவு உள்ளதாக நிறுவப்படவில்லை. சுமேரிய மொழியைப் போல் இதுவும் ஒரு தனி மொழியாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. எனினும் சில ஆய்வாளர்கள், ஈல-திராவிடம் என்னும் ஒரு பெரும் மொழிக் குடும்பம் ஒன்று பற்றி கருத்துத் தெரிவித்து உள்ளனர்


நோர்வே நக்கீரா நடா பதிவுக்கு நன்றி. இணுவிலைச் சேர்ந்து ஒரு புலிசார் பெண் இந்த மொசப்பத்தேனிய சுமேரியரை தமிழர்கள் திராவிடர்கள் என்று இணைத்து தொடர்பு படுத்து முயன்றுள்ளார். கூகுளிலும் இதுபற்றி சில தகவல்கள் உள்ளன. எனது அறிவுக்கு எட்டியபரை நிலவசைவு கடற்கோள் என்பனவற்றையும் விஞ்ஞான விளக்கங்களும் ஒப்பிடும்போது உறைபனிக்காலத்தில் இந்தியா இலங்கை குமரிக்கண்டம் அனைத்தும் ஒரே தரையாகவே இருந்தது. பூமிநகர்வில் உடைக்கப்பட்டு இந்தியா இலங்கை குமரிக்கண்டும் ஆஸ்ரேலிய நகரத் தொடங்கியது. இப்பகுதியின் தாழ்நிலமானதால் கடலினுள் மூழ்கத்தொடங்கியது. அதாவது நிலக்கீழ் ஓடுகள் உடைந்து பிரிந்ததால். பலர் இத்தாண்ட கண்டத்தை லெமூறியாக் கண்டம் என்றனர். இந்நிலம் தாழும்போது இமையம் எழுந்ததாக வேறு சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எது எப்படி இருந்தாலும் இந்தியத் திராவிட அடிகள் இரத்த மரபணு ஆய்வுகள் திராவிடர்கள் ஆபிரக்க அடியினர் என்பதை அடித்துக் கூறலாம். அத்துடம் விஞ்ஞானமும் தர்க்கமும் இதையோ கூறுகின்றன: லெமூரியா பிரிந்தபின்னரான ஆய்வுகளைப் பற்றியே அதிகமானவர்கள் பேசுகிறார்கள்

நோர்வே நக்கீரா திராவிடமொழி என்று ஒரு மொழியோ பலமொழிகளோ இருக்கவில்லை. தமிழில் இருந்து மற்றைய முக்கியமாக வடமொழியுடன் இணைந்து பலமொழிகள் உருவாயின. இவைற்றின் கூட்டுப்பெயரே திராவிடர் திராவிடம். இந்திய தமிழக வந்தேறி அரசியல்வாதிகள் தம்மை தமிழ்நாட்டில் உறுதிசெய்வதற்காகத் தூக்கப்பட்டதே திராவிடம். தி.க பெரியார் என்ற பொறுக்கி யார்? எங்கிருந்து வந்தான். இந்த பெரியார் யார் தெலுங்கு நாயக்கன். கைபர் கணவாயூடு வந்து இஸ்லாத்தை ஆதரித்தான்.தமிழுக்கு என்ன செய்தான்? ஆனால் தமிழர்களை மூளைச்சலைவைக்கு உள்ளாக்கினான். இதைத் தொடர்ந்து திருத்த முடியாத கழுதைகள் (திமுக) அரசியல் வடிவம் பெற்றது. ஈழம் என்பது கீழம் எனப்பதை இலகுவாக உய்க்க முடிகிறது. தாழ் நிலங்களே கடலினுள் தாண்டவை. அத்துடன் ஈழவர்களைப் பல்லவர்கள் எனக்காண்கிறது சில ஆய்வுகள். இதற்கான சாத்தியமும் உண்டு. இலங்கையில் எடுக்கப்பட்டு அகழ்வாய்வுகள் கல்வெட்டுக்களில் பல தெலுங்கு எழுத்துக்களை காணமுடிகிறது. அதாவது தெலுங்கணவை அண்டியே இலங்கை இருந்திருக்க வேண்டும். கடற்கோள்களாலும் பூமியசைவாலும் அதன்விசையில் கீழ்நோக்கிய நகர்வ நடந்திருக்கலாம். அக்காலத்தில் மலையாளிகளின் வருகை அதிகரித்திருந்தது. நாம் அறியும் காலத்திலே வேலை நிமிர்த்தமாக பல மலையாளிகள் யாழ்பாணத்தில் வசித்தார்கள். முறிவு தறிவு என்றால் மலையாளத்தானிடம் போனால் இழுத்து முறித்து ஒருநாளிலே ஒருகிழமையிலோ சரியாக்கிவிடுவான் என்று பலர் படை எடுத்தனர். நடிகை சுயாத்தாவின் தந்தை மகாஜனக்கல்லூரியின் ஆசிரியர். சுயாத்தா எமது கல்லூரியில்தான் கல்வி பயின்றார். இலங்கையின் கடசி அரசன் சிறீவிக்கிரம ராஜசிங்கள் ஒரு நாயக்கன். இப்படிப் பல தரவுகளை எடுத்துப்பார்க்கும் போதும் மொழி ரீதியான மாற்றங்களைக் காணும் போதும் நாமே சிலமுடிவு களுக்கு வரமுடியும். தமிழுடனான வடமொழி ஆக்கிரமிப்பு எப்படிமொழி மாற்றஙகளை உருவாக்கின என்பதை பார்க்கலாம். 70வடமொழியும் 30தமிழுமாக இன்று இருக்கிறது தெலுங்கு; 30வீத வடமொழியும் 70வீத தமிழுமாக உள்ளது மலையாளம். கீழே தமிழகம் (100வீதம் வெள்ளைக்காரனுக்கு பிறந்ததுகளாகி விடுவார்கள்). மனித: அதிராக ஆக்கிரமிப்புகள் மொழியில் ஏற்படுத்திய பாதிப்பை நாம் காண முடிகிறது. சிங்கத்தை எடுத்துக் கொண்டால் பல மொழிகளின் கலப்பாகவே உள்ளது. தமிழ்: பிரித்துக்களுடன் வந்த பாளி; வடமொழி: ஆபிரிக்க மொழிக்கலப்பு முக்கியமாக சுகைலியையும் கொண்டுதாக உள்ளது. தொடர்ந்து எழுதினால் ஒரு புத்தகமே எழுதாலாம். ஈழம் என்பதை ஈரானில் இருந்து மலையடிவார நிலத்துடன் ஒப்பிடுவது எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை. இந்த ஈழு என்பது எலுவாக மாறி பின் அல் ஆனது என்பது சில ஆய்வுகளின் முடிவு. இந்த அல்தான் அல் கைடா: அல சீரா முல்லாக கிரேக்காரன் அல் சை... எல்லாம். ஆனால் வடவிந்தியாவுக்கும் ஈரானக்கு மிக நெருங்கிய தொடர்பு உண்டு. இந்தி என்ற மொழி வடமொழி பாரசீக மொழி இரண்டின் கலப்போ.


நானறிய ஈழ வரி என்றொரு வரி மலையாளத்தில் உண்டாம்,அது கள்ளுக்கு அல்லது பனை மரத்துக்கான வரி என்று சொல்லப்படுகின்றது!ஈழவர் என்றொரு பிரிவும் இருப்பதாக அறியப்படுகின்றது!இந்தியாவில் இருந்து  இலங்கையை பார்க்கையில் முதலில் தெரிவது நம் வடபகுதிப் பனைகளே !!அதனால் பனைகள் நிறைந்த நாடு என்றார்கள் என்று சொல்லப்படுகின்றது!பனை=ஈழம் ,ஈழநாடு=என்றால் இலங்கை,இலங்காபுரி........

யேசுவுக்கு முன் பிறந்தது நத்தார் எனும் ஒளித்திருநாள் (சூரியசங்கிராந்தி) : நோர்வே நக்கீரா

Kristen treஉலகம் முழுவதும் யேசு கிறீஸ்துவின் பிறந்தநாள் மார்கழி 24இரவு சாதி மத இனவேறுபாடின்றி கொண்டாடப்படுவதை காண்கிறோம். இதற்கு யேசுவின் பிறந்ததினம் மட்டும்தான் காரணமா? மற்றைய மதங்களில், ஐதீகங்களில், கலாசாரங்களில் யேசு பிறப்பதற்கு முன்னால் இந்நாட்களில் ஏதாவது விசேடமாகக் கொண்டாடப்பட்டதா? மதங்கள் பல கலாசார, ஐதீக, வேற்று நம்பிக்கைகளின் ஆக்கிரமிப்புக் கொண்டதாகவே உள்ளன. உ.ம். அரசையே துறந்த புத்தரின் பௌத்தம் அரசுகளின் ஆதிக்கத்தின் கீழ்தான் ஆக்கிரமிப்பெற்றது விரிவுபடுத்தப்பட்டது.
மாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே அவள் மல்லிகை என்று மார்கழிக்குளிரை பெண்ணுக்கு வர்ணித்தான் கவிஞன். ஆனால் பொதுவாக மார்கழி பீடைமாதம் என்கிறது இந்துமத சாத்திரமுறைகளும், நோடன்மித்துக்களும், ஐரோப்பிய வாழ்க்கை அனுபவமும். இதற்கு வாழ்வியலுடன் தொடர்புள்ள காலநிலையே காரணமாகிறது. ஐரோப்பிய, வடதுருவநாடுகளின் அதன் மித்துக்கதைகள் மார்கழியை நோய்கள், சாக்கள், நிறைந்த துர்மாதமாகவே காண்கிறன. சாதாரணமாக ஐரோப்பாவில் இம்மாதம் இருள், குளிர், நோய்கள், சலிப்பு, பிடிப்பின்மை, தற்கொலைகள் நிறைந்தமாதமாகவே இன்றும் இருந்து வருகிறது. அத்துடன் சூரியனைக்காணாத துருவநாடுகளில் சோர்வும் அசதித்தன்மையும் விருப்பற்ற, வெறுப்புடைய நாட்களாகக் கழிவதையே காணமுடிகிறது.
முக்கியமாக வடதுருவத்து நோர்வே போன்ற ஸ்கன்டிநேவிய நாடுகளில் யேசுவின் பிறப்பிற்கு முன்னரே மார்கழி 22முதல் 25வரையான நாட்கள் விமர்சையாக முக்கிய நாட்களாகக் கொண்டாடப்பட்டு வந்தன. அன்று இந்நாடுகள் விவசாயம், கடல்தொழில் கடற்கொள்ளையே வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் நிர்ணயித்தது. இந்த நிலம்சார் வாழ்வாதாரத்தைக் கொண்டவர்கள் ஒருவிதமாகவும், கடல்சார் வாழ்வாதாரத்தைக் கொண்டவர்கள் இன்னொரு விதமாகவும் மார்கழி 24 இரவைக் கொண்டாடுவார்கள்.
இந்த மார்கழி 24 இரவில் அப்படி என்ன அதிசயம் உள்ளது? இருள்சூழ்ந்த பீடை மாதம், கறுப்புசக்திகள் (பேய் பிசாசு சூனியம் ..)வீரியம் கொள்ளும் மாதம், விவசாயமே கடற்தொழிலே குற்றியபோகம், குளிர், நோய், நொடி அதிகரித்திருக்கும் மாதத்தில் என்ன கொண்டாட்டம் வேண்டியிருக்கிறது? மார்கழி 24 இரவு பூமியானது ஒளியை நோக்கித் திருப்புவதாக அவர்கள் கணித்தார்கள். இந்நாளில் இருந்து பூமியில் ஒளி அதிகரித்துக் கொண்டே வரும். இதை வின்ரர் சூல் வர்வ் (குளிர்காலச்சூரிய சங்கிராந்தி) என்று நோர்வேயிய மொழியில் கூறுவார்கள். இதே போலவே ஆனி (யூன் 23) இல் இருந்து சூரியஒளி மங்கத்தொடங்கும். இதை “சந்தான்ஸ்”(நடுக்கோடை ஈவ்) என்பர். சுருங்கச் சொல்லின் அதி இருள்கூடிய நாள் மார்கழி 23 இரவாகவும். அதிஒளி கூடிய நாள் ஆனி 23 ஆகவும் இருப்பதை விஞ்ஞானம் இன்று ஒத்துக்கொள்கிறது.

அதியிருள் கூடிய நாளான மார்கழியில் 22-24 தொழில்கள் நிறுத்தப்பட்டு, பாண் கேக்போன்ற பதனிகள் செய்வதும் நிறுத்தப்பட்டு, கிராமத்தவர்கள் ஊர்தலைவரின் தலைமையின் ஒன்று கூடி வீடுவீடாக பாடல்களைப் பாடிச் சென்று வீட்டுகளை கறுப்புச்சக்திகளில் இருந்து காத்துக் காவல்படுத்துவார்கள். அதன்பின் கதவுகளில் சக எனும் அடையானத்தை இட்டுவிட்டு காவல்படுத்தவிட்டு அந்தவீட்டிலிருந்தோ, வீட்டாருடனோ வெள்ளிக்காசை எடுத்துவருவார்கள். இது ஊரில் கிறிஸ்மஸ் பண்டிகையின் போது கரோல் போவதையும் வீடு வீடாக அரசி மரக்கறி சேர்த்து கோவிலில் அன்னதானம் கொடுப்பதை நினைவுபடுத்தலாம். இப்படி ஊர் ஊராக பாடிச்சென்று வீடுகளை கறுப்புச்சக்திகளிடம் இருந்து காத்தபின் எடுத்துவரும் வெள்ளிக்காசுகளை ஊருக்கு வெளியே உள்ள பாழும் கிணற்றில் வீசி எறிந்துவிட்டு திருப்பிக்பார்க்காது வந்து குறிப்பிட்ட விழா ஒழுங்கு செய்யப்பட்ட இடங்களில் ஒன்று கூடுவார்கள்.
http://inioru.com/?p=43294

No comments:

Post a Comment