தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 24 டிசம்பர், 2014

113 வயதில் யாழில் ஒரு சாதனை.... (படங்கள் இணைப்பு)

தனது இளமைக்காலத்தில் பெரிய சண்டியனாக விளங்கியவர் எந்தவொரு போதைப்பொருளுக்கும் அடிமைப்படவில்லை. பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளில் சிலரும் இறந்துவிட்ட நிலையிலும் இன்றும் தடுமாறாத உடலும் உளமும் கொண்டு சாதராணமாகவே உலாவிவரக்கூடிய நிலையில் வாழ்கிறார்.

வேலை செய்தே பழக்கப்பட்ட உடல் இன்றும்கூட சும்மா இருப்பதில்லை, ஏதாவதொன்றைச் செய்துகொண்டேயிருக்கின்றது. தனது நீடித்த இந்த ஆயுளுக்கு சிறந்த உணவுப் பழக்கமும் தளராத உழைப்புமே காரணமென்கிறார்.

எமது மூதாதையரிடம் நச்சுக்கலப்பற்ற உணவுப்பழக்கமும் எந்நேர உழைப்பும் காணப்பட்டதால் இயற்கை அவர்களுக்கு நீடித்த ஆயுளைக் கொடுத்திருந்தது. ஆனால் இன்றோ தொற்றா உயிர்வழி நோய்கள்கூட எமது தலைமுறையை நெருக்கிப்பிடிக்கத் தொடங்குகின்றது.

இன்றும்கூட எமது அப்பு ஆச்சிகள் தமது நிறைந்த வயதிலேயே காலமாகின்றனர், அதேநேரம் அவர்களின் பிள்ளைகளும் அவர்கள்பின்னாலேயே சுடுகாடு செல்கின்றனர், பல்வேறு தொற்றா உயிர்வழி நோய்களால் பலியெடுக்கப்பட்டு..!
இந்த மாநிலத்தையே வென்றவனும் இருக்கிறான் ஆனால் மரணத்தை வென்றவன் யாருமே இல்லை.

மரணத்தை யாராலும் வெல்லமுடியாது, ஆனால் அதன் பிடியினைத் தள்ளிப்போட முடியும். அதுவும் மனிதனின் கையிலேயே உள்ளது.

வாழ்ந்துகொண்டிருப்பவனிற்கு வாழ்ந்துகெட்டவனே வழிகாட்டியென்பார்கள். ஆனால்
காத்தியப்பு வாழ்ந்துகொண்டே வழிகாட்டுகின்றார். இன்னும் பலகாலம் இதே இறுமாப்போடு வாழ வாழ்த்துங்கள் வாசகா்களே!!! இச் செய்தியை மற்றவா்களுக்கும் தெரிவித்துக் கொள்ளுங்கள்.

23 Dec 2014

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக