திருமணம் ஆகாமல் இருக்கும் கன்னிப் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு திருமண பாக்கியத்தை அருளுகிறார் மச்சக்கார முருகன். |
சென்னை வானகரத்தில் மச்சக்கார முருகன் கோவில் அமைந்துள்ளது. மலைராஜனின் மகளாகிய வள்ளியை, காட்டில் வளர்ந்து கிடக்கும் கிழங்குகளும், தேனும், தினைமாவும் அவளை வளர்த்து வனப்பாக்கியது. காலம் அவளை மலரச் செய்தது, பன்னிரெண்டு வயது தொட்ட மகளை தினைபுனங்களில் காவல் காக்க அனுப்பினான் வேடர்குல வேந்தன். லவலீ என்னும் வள்ளி மலைக்கு வந்த நாரதர் வள்ளியைக் கண்டார். இவள் வேலனுக்கு மாலையிட வேண்டியவள் என்பதை, தன் தவ வலிமையால் உணர்ந்தார். ‘முருகனை சந்தித்து வள்ளியை கரம்பிடிக்க வேண்டிய தருணம் கனிந்து விட்டது’ என்று சொன்னார். அதன்படி முருகப் பெருமான் வள்ளிமலைக்கு வந்தார். வேடர்குல வள்ளி மீது மையல் கொண்டார். முதலில் ஒரு வயோதிகனாக வடிவெடுத்து வள்ளியை சீண்டி விளையாடினார். வள்ளி கோபமுடன் சீறினாள், கடுமையாக எச்சரித்தாள், மறுநாள் இளைஞனாக வடிவெடுத்து வந்தார். உடனே வள்ளி, நேற்று வயோதிக வேடம், இன்றைக்கு இளைஞனாக வந்து மயக்க பார்க்கிறீர்களா? என்று கேட்டாள். “எப்படி கண்டுபிடித்தாய் வள்ளி?’’ என்று கேட்க, “வேஷம் போடும்போது இந்த மச்சத்தை மறைக்க வேண்டும் என்பது தெரியாதா?’’ என்று கன்னத்தில் இடித்து விட்டு நகர்ந்தாள். வள்ளியை வளைக்க முடியாத முருகன், அண்ணன் விநாயகனை வேண்ட, யானையாய் வந்து வள்ளியை பயமுறுத்தித் துரத்தியதும், தன்னை காதலித்தவர் யார் என்ற உண்மை தெரிந்து வள்ளி கந்தனிடம் காதல் கொண்டார். ஆனால், அன்று வள்ளியோடு விளையாட மச்சத்தோடு வந்த முருகன் அதே தோற்றத்தோடு சென்னை வானகரத்தில் கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மச்சக்காரன் சுவாமிநாத பாலமுருகன் என்பது சுவாமியின் திருநாமம். இவரை சென்று வழிபடும் திருமணமகாதவர்களுக்கு விரைவில் திருமணம் ஆகும் என்பது ஐதீகம். |
தொலைக்காட்சி!!
இந்த வலைப்பதிவில் தேடு
புதன், 24 டிசம்பர், 2014
திருமண தடையா? வரம் தருகிறார் மச்சக்கார முருகன்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக