நமது உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பது பழங்கள் தான் என்று சொன்னால் அது மிகையல்ல.
நாவல் மரத்தின் பட்டை, பழம், விதை, இலை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவகுணம் கொண்டது ஆகும்.
இதில் கால்சியம் அதிக அளவில் இருக்கிறது, மேலும் சோடியம், தாமிரம் ஆகியவை கணிசமான அளவில் உள்ளது.
நாவல் பழத்தின் மகத்துவங்கள்
* நாவல் பழச்சாற்றை தினமும் மூன்று வேளை தவறாமல் உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோயாளியின் சர்க்கரையின் அளவு 15 நாட்களில் பத்து சதவிகிதம் குறைந்துவிடும், மூன்று மாதத்திற்குள் முற்றிலும் கட்டுப்படுத்தி விடலாம்.
* மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும்.
நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும்.
* நாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் பெண்களுக்கு உண்டாகும் கருப்பை பாதிப்புகள் சரியாகும்.
* நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். மேலும் சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும், உடல் சூட்டைத் தணிக்கும்.
* நாவல் பழத்தினை அளவாக சாப்பிட்டு வந்தால், தமனிகளில் ஏற்படும் பிரச்சனைகளை குறைத்து, மாரடைப்பு வருவதைக் குறைக்கும்.
* வயிற்று போக்கினால் அவஸ்தைப்படுபவர்கள், நாவல் பழத்தினை ஜூஸ் போட்டு, அதில் சிறிது கல் உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக