நாம் தினமும் பயன்படுத்தும் பெர்ஃபியூமில் கலந்துள்ள வேதிப் பொருட்கள் உடலுக்கு மிகவும் ஆபத்தாக உள்ளது.
கொட்டாவி தொற்று நோயா?
கொட்டாவியை ஒருவர் விட்டால் நம் அருகில் இருப்பவர்களையும் தொற்றிக் கொண்டு அவர்களையும் கொட்டாவி விடத் தூண்டுமா என்ற கேள்வி பொதுவாக அனைவரிடத்திலும் இருக்கிறது.
ஒருவர் விடும் கொட்டாவி அடுத்தவர்களையும் விடத் தூண்டும், என்பது உண்மைதான். கொட்டாவி விடும் நூறு பேரில் ஐம்பது சதவீதம் பேர் கொட்டாவியை மற்றவர்களுக்குத் தொற்ற வைக்கின்றனர்.
ஒருவர் கொட்டாவி விடுவதைப் பார்ப்பது மட்டுமல்லாது கொட்டாவி பற்றி ஒரு புத்தகத்தை வாசித்தால்கூடக் கொட்டாவி தொற்றுவதற்கு வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பெர்ஃபியூம் பயன்படுத்துவது நல்லதா?
அன்றாடம் வியர்வை மூலம் உண்டாகும் உடல் நாற்றத்தை மறைக்க பெர்ஃபியூம் பயன்படுத்தும் பழக்கம் அனைவருக்கும் இருக்கும்.
இத்தகைய பெர்ஃப்யூம்களில் கிட்டத்தட்ட 3 ஆயிரத்து 100 வேதிப்பொருட்கள் கலக்கப்படுகின்றன.
இந்த வேதிப்பொருட்கள் தோல், நுரையீரல், ரத்த தமனிகள் வரை உடலில் ஊடுருவிச் சென்று கல்லீரல் நஞ்சடைதல், ஒவ்வாமை, கற்றல் குறைபாடு, எதிர்ப்புசக்திக் குறைவு, புற்றுநோய் போன்றவற்றை உருவாக்குகின்றன.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக