ஜேர்மனியில் உட்கார்ந்தபடியே நவீன யுகத்தில் வேகமாக வளர்ந்துவரும் தகவல் தொடர்பைக் கொண்டு தன் ராஜ்ஜியத்தை இவர் ஆண்டுகொண்டிருக்கிறார்.
தற்போது 62 வயதாகும் கிங் பான்சா, ஜேர்மனியில் இருந்து கொண்டே கானாவில் உள்ள ஹொஹோய் (Hohoe) பகுதியில் வசிக்கும் 2 லட்சம் மக்களின் பிரச்சனைகளை 'ஸ்கைப்' மூலம் தீர்த்துவைக்கிறார்.
சிறு வயதில் படிப்புக்காக ஜேர்மனி சென்ற பான்சா, அங்கு ஒரு பெண்ணை காதலித்துத் திருமணம் செய்துகொண்டு் அங்கேயே தங்கிவிட்டார்.
1987-ல் ஹொஹோய்க்கு ராஜாவாக இருந்த பான்சாவின் தாத்தா இறந்ததையடுத்து இவர் அரசர் ஆக முடிசூடியுள்ளார்.
தன் ராஜ்ஜியத்தை ஸ்கைப்பில் இணைத்துக்கோண்டு, வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் தீர்ப்புகள் சொல்வதும், உத்தரவுகளைப் பிறப்பிப்பதுமாக ஆட்சியை தற்போது பார்த்து கொள்கிறார்.
ஆனால், இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தனது ராஜ்ஜியமான ஹொஹோய்க்குச் தவறாமல் சென்று மக்களை சந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
|
தொலைக்காட்சி!!
இந்த வலைப்பதிவில் தேடு
திங்கள், 15 டிசம்பர், 2014
'ஸ்கைப்' மூலம் தீர்ப்பு: ராஜ்ஜியத்தை ஆளும் மொடர்ன் அரசர் (வீடியோ இணைப்பு) !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக