அவுஸ்திரேலியாவில் வலிப்பு நோயிற்காக இளம்பெண் ஒருவர் சாப்பிட்டு வந்த மருந்து, அவருக்கு பயங்கரமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் தலைநகர் சிட்னியில்(Sydney) வசிக்கும் டானிகா ஹெரோன்(Danika Heron Age-19) என்ற இளம்பெண்ணுக்கு, தனது 18 வயது முதல் வலிப்பு நோய் இருந்துள்ளது.
எனவே அவர் மருத்துவரை நாடி மருந்துகள் உட்கொண்டு சிகிச்சையும் பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் இவர் தனது 19வது பிறந்தநாளை கொண்டாடும் வேளையில், திடீரென இவருக்கு உடலில் அலர்ஜி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வலிப்புக்கான மருந்து அவருக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்பதை கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், நாங்கள் சரியான மருந்தை தான் இப்பெண்ணுக்கு கொடுத்தோம் என்றும் கோடியில் ஒருவருக்கு இந்த மருந்து பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளனர்.
தற்போது சிகிச்சை பெற்று வரும் ஹெரோனின் உடல் மற்றும் முகம் முழுவதும் தோல் உரிந்த நிலையில் உள்ளது. மேலும் அவர் எந்த நேரத்திலும் இறக்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக