கலாங் விரிகுடா என்பது வடக்கு வியட்நாம் பகுதியில் ஹனோய்க்குக் கிழக்கே 170 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
இந்த கலாங் விரிகுடாவில் கேட் பா தீவு, டாவ் பீ தீவு, டாவ் கோ தீவு, போ கான் தீவு என்பது போன்ற சுண்ணாம்புத் தீவுகள் பல காணப்படுகின்றன.
இத்தீவுகளில் டாவ் கோ தீவுப் பகுதியில் சுண்ணக்கல் விழுதுகள், சுண்ணக்கல் புற்றுகள் கொண்ட 20 மீட்டர் உயரத்துக்கும் அதிகமான அழகிய நிறங்களுடைய குகைகள் பல இருக்கின்றன.
இந்த விரிகுடாப் பகுதியில் மிதக்கும் கிராமங்கள் பல இருக்கின்றன. இங்கு மீன் பிடிக்கும் தொழில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
இந்த விரிகுடா பகுதிக்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாவாசிகள் படையெடுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தப் பகுதி “புதிய ஏழு உலக விந்தைகளுக்கான அறக்கட்டளை” அமைப்பு நடத்திய புதிய ஏழு இயற்கை உலக விந்தைகளுக்கான வாக்கெடுப்பில் ஒன்றாகக் கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 11ம் திகதி அன்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக