அர்ஜென்டினாவில் உள்ள ரோசாரியோ என்ற இடத்தில் 1987ம் ஆண்டு யூன் 24ம் திகதி பிறந்தார் மெஸ்ஸி.
இவருக்கு 11 வயதாகும் போது, ஹார்மோன் வளர்ச்சி குறைபாடு இருப்பதாக கண்டறியப்பட்டது.
மெஸ்ஸியின் வளர்ச்சியில் பிரிமேரா டிவிஷன் கிளப் ரிவர் ப்ளேட் மிகவும் அக்கறைக் கொண்டிருந்தாலும், இந்த சிகிச்சைக்கு பணம் செலுத்த போதுமான பணம் அவர்களிடம் இல்லை.
ஏனெனில் அது ஒரு மாதத்துக்கு 900 டொலர் செலவாகக் கூடியதாக இருந்தது.
பார்சிலோனாவின் விளையாட்டுப்பிரிவு தயாரிப்பாளர் கார்லஸ் ரெக்ஸாக் என்பவர், கடலோனியாவில் லேலெய்டா என்ற இடத்தில் இருந்த மெஸ்ஸியின் உறவினர்கள் மூலமாக மெஸ்ஸியின் திறன்களை அறிந்திருந்தார்.
ஒரு சந்தர்ப்பத்தில் இவர் விளையாடியதைப் பார்த்த பார்சிலோனா இவருடன் ஒப்பந்தம் போட்டது.
2004ம் ஆண்டில் அர்ஜென்டினா அணிக்காக முதன்முதலில் களமிறங்கினார், அதில் பராகுவேவுக்கு எதிராக 20 வயதுக்குட்பட்டோர் நட்புரீதியான போட்டியில் விளையாடினார்.
பின்னர் சர்வதேச போட்டியில் மார்ச் 28, 2009 இல் வெனிசுலாவுக்கு எதிரான ஒரு உலகக்கிண்ண காலிறுதி போட்டியில், முதல்முறையாக 10 என்ற எண் கொண்ட அர்ஜென்டினா ஜெர்சியை மெஸ்ஸி அணிந்த படி களமிறங்கினார்.
இந்த போட்டியிலேயே முதல் முதலாக டீகோ மாரடோனா அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளராக அதிகாரப்பூர்வமாக பங்கேற்றார். முதல் கோலை லியோனல் மெஸ்ஸி அடித்தார், போட்டியை 4–0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வென்றது.
இவருடைய ஆட்ட முறை மற்றும் திறமையின் காரணமாக இவர், கால்பந்தாட்ட சாதனையாளரான டீகோ மாரடோனாவுடன் ஒப்பிடப்படுகிறார்,
மாரடோனாவும் இவரை தன்னுடைய "வாரிசு" என்றே அறிவித்துள்ளார்.
சாதனைகள்
பிஃபா U20 உலகக்கிண்ணத்தில் அதிக கோல்கள்: 2005
பிஃபா U20 உலகக்கிண்ணத்தில் தொடர் நாயகன்: 2005
கோப்பா அமெரிக்கா டோர்னமென்டின் சிறந்த இளம் வீரர்: 2007
ஆண்டின் சிறந்த U21 ஐரோப்பிய கால்பந்தாட்ட வீரர்: 2007
அர்ஜென்டினாவின் சிறந்த விளையாட்டு வீரர்: 2005, 2007, 2009
ஆண்டின் சிறந்த இளம் வீரர்: 2006–2007, 2007–2008
சாம்பியன்ஸ் லீக் அதிக கோல்கள்: 2008–2009
பிஃபா கிளப் உலகக்கிண்ணத்தில் தங்க பந்து: 2009
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக