சமகாலத்தில் இளம் வயதினர் மது அருந்துவதற்கு அடிமையாதல் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
இதற்கு வயதும் ஒரு காரணமாக அமைகின்றது.
அதாவது 14 வயது உடைய ஒருவர் சாதராணமாக ஒரு கிளாஸ் வைனையேனும் சுவைப்பாராயின் அவர் தொடர்ச்சியாக மதுவுக்கு அடிமையாகிவிடுவார் என விஞ்ஞானிகள் தெரவித்துள்ளனர்.
கனடாவிலுள்ள Vermont பல்கலைக்கழக பேராசிரியரான Dr Hugh Garavan என்பவரும் இணைந்து நடாத்திய ஆய்வின் அடிப்படையிலேயே இக்கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்விற்காக இங்கிலாந்து, அயர்லாந்து, பிரான், மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த 14 வயதை எட்டிய சிறுவர்கள் 2,000 பேர் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது 14 வயதுடைய ஒருவர் ஒரு கிளாஸ் வைனையேனும் ஒரு முறை சுவைப்பாராயின் அவர் தொடர்ச்சியாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகும் சாத்தியம் 70 சதவீதம் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக