தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 5 மே, 2014

வெற்றிலையின் பயன்களும், வெற்றிலை போடும் முறையும்:


* ஆசிய நாடுகளில்தான் அதிகமாக வெற்றிலை போடும் பழக்கம் காணப்படுகிறது. இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், இலங்கை போன்ற தெற்காசிய நாடுகள்தான் இதன் தாயகமாக அறியப்படுகிறது. குறிப்பாக இந்தோனேசியாவில் வெற்றிலை வெகு பிரபலமான தாவரமாக பயிரிடப்படுகிறது. இந்தியாவில் நீண்டகாலமாகவே வெற்றிலை மருத்துவ பயன்பாட்டில் இருந்து வருகிறது.
* வெற்றிலை உறுதியான தண்டினை கொண்ட மற்ற தாவரங்களை பற்றிப்படரும் கொடி வகை தாவரமா கம். அதிகபட்சம் 15 மீட்டர் உயரம் வரை படரும். சற்றே இதயவடிவம் போல கை அகல அளவில் சராசரியாக வளரும் பச்சை, இளம்பச்சை இலைகளே வெற்றிலையாக உண்ணப்படுகிறது. புகையிலை, பாக்குடன் வெற்றிலை உண்பது தீய பழக்கமாகும். அளவான வெற்றிலையை சுண்ணாம்புடன் மட்டும் சுவைப்பது பல்வேறு மருத்துவ குணம் கொண்டதாக அறியப்பட்டு உள்ளது.
* வெற்றிலை அதிக அளவில் நீர்ச்சத்து நிறைந்தது. 6 வெற்றிலைகளில் 80 முதல் 85 சதவீதம் நீர்ச்சத்து காணப்படுகிறது. மேலும் புரதம், தாது உப்பு, நார்ச்சத்து மற்றும் பல அத்தியாவசிய ரசாயனப் பொருட்களும் இதில் உள்ளன.
* குறைந்த ஆற்றல் வழங்குபவை வெற்றிலைகள். 100 கிராம் வெற்றிலையால் உடலுக்கு 44 கலோரிகள் ஆற்றலே கிடைக்கிறது.
* 6 வெற்றிலையில் 3.5 சதவீதம் அளவு புரதமும், 3.3 சதவீதம் தாதுஉப்புக்களும், கொழுப்புப் பொருட்கள் மிகக் குறைவாக கொண்டது வெற்றிலை. 6 வெற்றிலையில் 0.4 முதல் 1 சதவீதம் வரையே கொழுப்பு பொருட்கள் காணப்படுகின்றன.
* நிகோடின் அமிலம் 100 கிராம் வெற்றிலையில் 0.89 மில்லிகிராம் அளவில் காணப்படுகிறது.
* வைட்டமின்-ஏ 2.9 மில்லி கிராம் அளவும், இதர வைட்டமின்களான தயாமின் 70 மைக்ரோ கிராம், ரிபோபிளேவனி 30 மைக்ரோ கிராம், வைட்டமின் சி 0.01 சதவீதம் காணப்படுகிறது. இவை வளர்ச்சிதை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு உடற்செயல்களில் ஈடுபடுபவை.
* உடலுக்கு அத்தியாவசியமான தாதுஉப்புக்களான பொட்டாசியம் 4.6 சதவீதமும், கால்சியம் 0.5 சதவீதமும், நைட்ரஜன் 7 சதவீதமும் காணப்படுகிறது. இதில் பொட்டாசியம் இதய செயல்பாடுகளுக்கும், கால்சியம் எலும்பு மற்றும் பற்களின் உறுதிக்கும் அவசியமாகும். இரும்புத்தாது மற்றும் பாஸ்பரஸ் குறைந்த அளவில் காணப்படுகிறது.
* பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சைகளால் ஏற்படும் நோய்த் தொற்றுகளை தடுக்கவல்லவை. டைபாய்டு, காலரா, காசநோய் கிருமிகளை கொல்லும் ஆற்றல்கூட இவற்றுக்கு உண்டு. சில ரசாயனங்கள் மூளையை சுறுசுறுப்பாக செயல்பட தூண்டுகிறது. புத்துணர்ச்சி தருகிறது. வியர்வை சுரப்பிகள் நன்கு வேலை செய்ய தூண்டுகிறது.
* 6 வெற்றிலையை சுண்ணாம்பு தடவி சுவைப்பதால் ஒரு டம்ளர் பாலில் கிடைக்கும் தாதுக்கள் உடலுக்கு கிடைக்கிறதாம்.
* வென்னீரில் வெற்றிலைகளை சேர்த்து கொதிக்க வைத்து தினமும் தண்ணீருக்குப் பதிலாக பருகி வந்தால் உடலில் பல்வேறு நோய்த்தொற்றுகளை தடுக்குமாம்.
* மலச்சிக்கல், தலைவலி, சரும அரிப்பு, அழற்சி, நினைவிழப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கான மருந்து தயாரிப்பில் வெற்றிலைகள் சேர்க்கப்படுகிறது.
வெற்றிலைப் பாக்கு போடும் முறை.
காலையில் ( களிப் ) பாக்கு மிகுதியாகவும் வெற்றிலை சுண்ணாம்பு குறைவாகவும், பகல் சாப்பாட்டிற்குப் பிறகு பாக்கு சுண்ணாம்பு மிகுதியாகவும் வெற்றிலை குறைவாகவும், இரவில் பாக்கு சுண்ணாம்பு மிகக் குறைவாகவும் வெற்றிலை மிகவும் அதிகமாகவும் போட்டுக்கொள்ள வேண்டும் எப்போதும் முதலில் ஊரும் நீரை உமிழ்ந்துவிட்டு, பிறகு ஊறும் நீரை உட்கொண்டு திப்பியை உமிழவேண்டும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக