தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 24 மே, 2014

மாணவ - மாணவிகளின் பாதுகாப்பு குறித்து 9 கட்டளைகள் ...........


சென்னை, மே 24-மாணவ, மாணவிகளின் பாதுகாப்பான பள்ளி பயணத்திற்காக 9 கட்டளைகளை காவல் துறையினர் வழங்கியுள் ளனர்.

கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத் தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

இதைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவி களுக்கு பாதுகாப்பு வழங்கு வது குறித்து சென்னை காவல் துறை ஆணையர் ஜார்ஜ் நட வடிக்கை எடுத்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக அண்ணா நகர், அம்பத்தூர் மற்றும் புளியந்தோப்பு ஆகிய காவல் துறை மாவட்டங்களில் கல்வி நிறுவன அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதற்கு இணை ஆணை யர் சண்முக வேல் தலைமை வகித்தார். 350க்கும் மேற் பட்ட கல்வி நிறுவன அதிகாரிகள், பொறுப்பாளர் கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கல்வி நிறுவனங் களுக்கு காவல்துறையினர் வழங்கிய ஆலோசனைகள்:

* கல்வி நிறுவனங்களின் நுழைவாயிலில் கண் காணிப்பு கேமரா பொருத்தி குழந்தை களை பள்ளிக்கு வரும் போதும், பள்ளி முடித்து திரும்பும் போதும் பாதுகாப் பாக செல்கிறார்களா? என் பதை கண்காணிக்க வேண்டும்.

* குழந்தைகள் போக்கு வரத்திற்காக நியமித்துள்ள வாகன ஓட்டுநர்கள், உதவி யாளர்கள் ஆகியோரின் விவ ரங்கள் முழுமையாக தெரிந்து கொள்ளவும்.

* பள்ளியில் நியமித் துள்ள ஆளினர்களின் புகைப் படம், தொலைபேசி எண் மற்றும் முகவர் ஆகியவற் றை வைத்து அவர்களின் பின்புலத்தை தீவிரமாக விசாரிக்கவும்.

* பெற்றோர் தங்கள் குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனத்தினு டைய வாகன ஓட்டுநர்கள் மற்றும் உதவி யாளர்கள் ஆகியோர்களின் விவரங்களை தெரிந்து வைத்து கொள்ளவும்.

* கல்வி நிறுவனங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து ஒரு பொறுப்பான நபரை நியமித்து குழந்தைகள் பள்ளிக்கு பாதுகாப்பாக வந்து செல்கின்றனரா என்று கண்காணிக்கவும் வேண்டும்.

இவ்வாறு காவல்துறையினர் கட்டளைகள் வகுத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக