தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 28 மே, 2014

நடனமாடும் தவளைகள்!!

தவளைகள் நடனமாடுகிறது என்று சொன்னால் அனைவரும் ஆச்சரியத்தோடு பார்ப்பார்கள். ஆம், நடனமாடக்கூடிய 14 புதிய தவளை இனங்களை விஞ்ஞானிகள் தென்னிந்தியாவிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் கண்டறிந்துள்ளனர். தன்னுடைய துணையைக் கவர்வதற்காக ஆண் தவளைகள் இந்த வித்தியாசமான நடன முறையைக் கையாளுகின்றன.
பின்னங்கால்களை லேசாக விரித்து, வாயைக் குவித்து இந்த நடனத்தை ஆடி பெண் தவளைகளை தன்வசம் இழுக்கின்றன. நடனமாடும் தவளைகள் மத்திய அமெரிக்கா, கிழக்கு ஆசியாவில் காணப்பட்டாலும் மகாராஷ்ட்டிரா முதல் தென்குமரிவரைக் காணப்படும் மேற்குத் தொடர்ச்சிமலையில் இந்த வகைத் தவளைகள் அதிக அளவில் காணப்படுகின்றன.
நெல்லியம்பதி தவளை
கண்டுபிடிக்கப்பட்ட இடத்தின் பெயரை வைத்து தவளைக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கெஹரென்ஸிஸ்
தவளையின் வாய்க்கு அடியில் வெண்ணிற பை காணப்படும்.
சைரந்திரி
மேற்குத் தொடர்ச்சி மலையில் சைலண்ட் வேலி என்று சொல்லப்படும் பள்ளத்தாக்கிலுள்ள சைரந்திரி என்ற இடத்தின் பெயரால் இந்த தவளை இனத்துக்கு சைரந்திரி என்று பெயரிடப்பட்டுள்ளது.
மல்லன் தவளை
புதிய தவளையினங்கள் அடையாளம் காணப்படுவதில் பெரும்பங்காற்றியுள்ள டாக்டர் மல்லன் கனியின் பெருமை சேர்க்கும் விதமாக இந்த தவளை இனத்துக்கு மல்லன் நடனத் தவளை இனம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
பொட்டுத் தவளை
உடலில் பொட்டுக்கள் காணப்படுவதால் இவற்றுக்கு பொட்டு நடனத் தவளையினம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
குறிச்சியர் தவளை
கண்டுபிடிக்கப்பட்ட இடத்தின் பெயரை வைத்து இவ்வகைத் தவளைக்கு குறிச்சியர் நடனத் தவளை என பெயரிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக