தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 29 மே, 2014

கூகிள் உருவாக்கும் மனிதர்கள் ஓட்டாமல் தானே ஓடும் கார்



டிரைவர் இல்லாமல் ஓடும் கார்களை ஹாலிவுட் படங்களில் பார்த்திருக்கலாம். 1977ல் வெளிவந்த “தெ கார் ” என்ற ஹாலிவுட் படம், ஆளில்லாத கார் ஒன்று அமெரிக்க நகருக்குள் புகுந்து செய்யும் நாசத்தை மிகவும் த்ரில்லிங்காகக் காட்டியிருந்தது. பேய் ஒட்டிவந்த கார் என்பதாக செல்லும் அந்தப் படக்கதை.
ஆனால் இப்போது , உலகப் பிரசித்தி பெற்ற கூகிள் நிறுவனம் ஆளில்லாக் கார்களை உருவாக்கும் முயற்சியைத் தொடங்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது.
காரோட்டிகள் செய்யும் தவறுகளை அகற்றி , காரோட்டும் வேலையை மேலும் பாதுகாப்பானதாக மாற்றுவதே இதன் நோக்கம் என்று கூகிள் நிறுவனம் கூறுகிறது.
இதுவரை, கூகிள் நிறுவனம், இந்தத் தொழில் நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில், தற்போது இருக்கும் கார்களை மாற்றியமைத்து, சுமார் 10 லட்சம் கிலோமீட்டர்கள் ஆளில்லாத நிலையில் ஓட்டிப் பார்த்துப் பரிசோதித்திருக்கிறது.
இது போல தானே ஒட்டிக்கொள்ளும் சுமார் நூறு கார்களை உருவாக்க கூகிள் திட்டமிடுகிறது. இது போன்ற கார்களில் ஸ்டியரிங் சக்கரமோ அல்லது பெடல்களோ இருக்காது. காரை நிறுத்துவதற்கும், ஓட்ட ஆரம்பிப்பதற்குமான பொத்தான்கள் மட்டுமே இருக்குமாம்.
மனிதர்கள் ஓட்டாத கார்கள் தேவை என்று வாதிடுபவர்கள், இந்த மாதிரி தொழில்நுட்பம் வந்தால்தான் , விபத்துக்கள் குறையும் என்று கூறுகிறார்கள்.
ஆனால் வேறு சில ஆராய்ச்சியாளர்கள், இந்த தொழில்நுட்பம் போக்குவரத்தையும் , நகர நெரிசலையும் மேலும் மோசமாக்கும் என்று கூறுகிறார்கள்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக