தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, May 25, 2014

மர்மங்கள் நிறைந்த பெர்மூடா முக்கோணம்


பெர்மூடா முக்கோணம்
உலகில் விஞ்ஞானம், அராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு போன்ற அனைத்தும் முன்னேறி பல வினாக்களுக்கு விடை கிடைத்து வந்தாலும், சில விடயங்கள் இதுவரை ஏன்? எதற்கு? எவ்வாறு நிகழ்கிறது? என்ற கேள்விக் குறிகளை விட்டு வெளிவரமால் தான் உள்ளது.
இதுபோல் ஐயங்களிலேயே காலங்களை கடந்து வந்து, தற்போதும் விடையில்லாமல் இருக்கும் ஓர் இடம் தான் பிசாசு முக்கோணம் என்றழைப்படும் பெர்மூடா முக்கோணம். அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் புளோரிடா மற்றும் ப்வொர்தோ ரிகோ ஆகிய பகுதிகளுக்கிடையே அமைந்திருக்கும் இந்த பெர்முடா முக்கோணம் படுபயங்கரமான பயண அனுபவங்களை தந்துள்ளது.
திகிலூட்டும் சம்பவங்கள்
இதுவரை இங்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட கப்பல்களையும், விமானங்களையும் அதனுள் இருந்த மக்களுடன் சேர்ந்து இவ்விடம் ஏப்பம் விட்டிருக்கிறது.
திறமைசாலிகளையும் சுவடில்லாமல் மறையவைக்கும் பிசாசு முக்கோணம் இங்கு வரும் விமானிகளும் கப்பலோட்டிகளும் எத்தனை பெரிய திறமைசாலிகளாய் கூட இவ்விடத்தை நெருங்கும்போது இவர்கள் வந்த தடயமே இல்லாமல் காணாமல் போய்விடுவர்.
மாயமாகும் விமானிகளின் கடைசி வார்த்தைகள்
காணாமல் போன விமானங்களுடனான தரைத்தொடர்பு துண்டிக்கப்பட்டு, ரேடாரிலிருந்து அவர்களுடைய இருப்பு காணாமல் போகியிருக்கிறது. இங்கு செல்லும் விமானிகள் தொலையும் போது கூறியதாவது 'நாங்கள் எங்கே இருக்கிறோம் என்றே புரியவில்லை! தொலைந்துவிட்டோம் என்று நினைக்கிறோம்'
'நாங்கள் ஏதோ ஒரு நிலபரப்பின் மேலே பறந்துக் கொண்டிருக்கிறோம் என்று தெரிகிறது. எங்களால் கீழே நிலத்தைப் பார்க்க முடியவில்லை!'  'நிலம் துண்டு துண்டாய் தான் கண்களுக்குத் தெரிகிறது' என கூறியுள்ளனர். விமானிகளின் கடைசி வார்த்தைகள் ரேடாரில் பதிவாகியபின் ரோடானின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது.
மர்மத்தை கடந்த முதல் மனிதர்
கிரிஸ்டோபர் கொலம்பஸ் கடந்த 1492ம் ஆண்டு இந்த முக்கோணத்தைக் பல அதிசய அனுபவங்களுடன் கடந்திருக்கிறார். அவருடைய கப்பலின் காந்த வட்டை (magnetic compass) முதலில் செயலிழந்து போயிருக்கிறது. காற்று ஏதுமில்லாமலேயே கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலேயும் கீழேயும்அலைந்துக் கொண்டிருந்த வெளிச்சப் புள்ளிகள் தெரிந்திருக்கின்றன. எனினும் தடைகளை மீறி அவ்விடத்தை விட்டு இவர் வெளியேறியுள்ளார்.
தன்னிய உண்ணிகள் வசிக்கும் இடமோ?
இங்கு காணாமல் போனவர்களுக்கு புவியில் ரீதியாக பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்தாலும் ,இங்கு மனிதரை உண்பவர்கள் வசிப்பதாக ஒரு காலத்தில் தகவல்கள் வெளியானது. ஆனால் மனிதரே போக முடியாத இடமாக இருக்கும் இந்த முக்கோணத்தில் எவ்வாறு மனிதரை திண்பவர் இருப்பது சாத்தியம் என விஞ்ஞானிகள் சிலர் விமர்சனை செய்தனர்.
எனவே அங்கு மனிதர்கள் இருப்பதற்கு 0.1 சதவீதம் கூட வாய்பில்லை என விஞ்ஞானிகள் தரப்பில் ஆழுத்தமாக கூறப்பட்டது. இன்றுவரை காணாமல் போன கலங்களைப் பற்றிய தெளிவான தகவல் எதுவுமே கிடைக்கவில்லை.
மர்மத்திற்கு கிடைத்த விடை
இந்த பெர்மூடா முக்கோணத்தை பற்றி பல்வேறு ஆய்வுகள் நடத்திய பின்னர், இங்குள்ள கடலில் அதிகளவில் மீதைன் மற்றும் ஹைட்ரை குமிழ்கள் இருப்பதால் கப்பல்கள் வானில் இழுத்து செல்லப்பட்டு மனிதர்கள் மாயமாகின்றனர் என விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இங்கு மனிதர்கள் செல்வதற்கான தீர்வு ஒன்றும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

No comments:

Post a Comment