தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 20 மே, 2014

அயோத்திதாசப் பண்டிதர் ............


ஒடுக்கப்பட்ட மக்களால் என்றென்றைக்கும் மறக்கப்பட முடியாத பெயர்.

பவுத்த நெறிக்குப் புதுக் குருதியைப் பாய்ச்சியவர் பூர்வ காலத்தில் பவுத்தர்களாய் இருந்தவர்கள் ஆதி திராவிடர்கள் என்று நிறுவியவர்.

அவர் கள் இந்துக்கள் அல்லர் என்றும் உறுதியாகக் கூறியவர்.

அண்ணல் அம்பேத்கர் பவுத்த மார்க்கத்தைத் தழுவியதற்கு ஒரு வகையில் முன்னோடியாக இருந்த வர் என்று கூடச் சொல் லலாம்.

திராவிடக் கழகம் என்ற பெயரில் ஓர் அமைப்பை நிறுவி நடத்தி வந்த ஜான்ரத்தினம் அவர் களுடன் இணைந்து திரா விடப் பாண்டியன் என்னும் இதழைத் தொடங்கிவர் (1882).

1907 ஜூன் முதல் தேதியன்று அவர் தொடங் கிய மற்றொரு இதழ் ஒரு பைசா தமிழன் அவருக்குப் பிறகு அவரின் மகன் பட்டாபிராமன் 14 மாதங்கள் இவ்விதழை நடத்தினார்; அதற்குப்பிறகு ஒரு பைசா தமிழன் இதழை கோலார் தங்க வயல் பண்டிதமணி ஜி. அப்பாதுரையார் நடத் தினார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அந்தக் கால கட்டத் தில் இதழ்நடத்துவதற்கு மரண தைரியம் இருந் திருக்க வேண்டும்.

1881இல் இந்தியக் குடிமக்கள் கணக்கெடுப்பு முதன் முதலாக நடந்த போது, சாதியற்ற திராவிடர்கள், அல்லது ஆதித் தமிழர்கள் என்று பதிவு செய்யுமாறு தாழ்த் தப்பட்ட மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

திராவிடர் என்ற சொல்லாக்கத்தை பெரியார் தான் கண்டுபிடித்தது போலவும், அந்தப் பெயரால் தமிழ் உணர்வு குன்றி விட்டது போலவும் குறுக்குச் சால் ஓட்டும் குறுக்குப் புத்திக்காரர்களின் காதுகளைத் திருகும் வகையில், சாதியற்ற திராவிடர்கள் அல்லது ஆதித் தமிழர்கள் என்று மக்கள் தொகைக் கணக் கெடுப்பில் குறிப்பிட்ட தன் மூலம் இரண்டும் வேறுபாடுடையதல்ல என்று ஆணி அடித்தது போலவே அறைய வில்லையா?

திராவிட மகாசபை என்று ஏன் இந்தப் பெயரில் அமைப்பைத் தொடங்கினார் என்பதையும் தமிழ்த் தேசிய தீரர்கள் தெரிந்து கொள்வார்களாக!

காத்தவராயன் என்ற இயற்பெயர் கொண்டவர் அயோத்திதாச பண்டித ரிடம் கல்வி கற்றதால் இப்பெயரை ஏற்றார்.

இன்று அவர் பிறந்த நாள் (1845) மறைவு 1914 மே 5.

வாழ்க அயோத்திதாசர்!

- மயிலாடன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக