தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 28 மே, 2014

வெஜிடபிள் இடியாப்பம்

இடியாப்பத்தை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.
தேங்காய்ப்பாலுடன் இதனை சேர்த்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
தற்போது இன்னும் கொஞ்சம் ஸ்பெஷலாக வெஜிடபிள் இடியாப்பம் செய்வது எப்படி என்று பார்ப்போம்,
தேவையானவை
இட்லி அரிசி – அரை கிலோ, பொடியாக துருவிய கேரட் – அரை கப், பொடியாக நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் – ஒரு கப், கோஸ் (துருவியது) – அரை கப், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, தேங்காய்ப்பால் – 100 மில்லி, உப்பு – தேவையான அளவு.
செய்முறை
அரிசியை நன்கு ஊற வைத்து, கெட்டியாக அரைத்து, உப்பு சேர்த்துக் கிளறவும். மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, கொதிக்கும் நீரில் போட்டு, உருண்டைகள் வெந்து மேலே மிதந்துவரும் சமயத்தில் எடுத்து சேவை அச்சில் போட்டுப் பிழியவும்.
நன்றாக சுத்தம் செய்து துருவிய மற்றும் நறுக்கிய காய்கள், நறுக்கிய கொத்தமல்லி ஆகியவற்றை அப்படியே சேவையின் மேல் தூவி சாப்பிடலாம்.
தேங்காய்ப்பாலை மேலே ஊற்றி சாப்பிடால் சூப்பர் டேஸ்ட்டில் இருக்கும்.
பச்சைக் காய்களும் வெந்த இடியாப்பமும் தனி ருசிதான்! பச்சையாக சாப்பிடக்கூடிய பயிறு வகைகள், இனிப்பு சோளம் சேர்த்தும் கலந்து கொடுக்கலாம். வேக வைத்த காய்களும் சேர்த்து சாப்பிடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக