நாகை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள தேவிக்கோட்டை சாண்டில்யன் எழுதிய ''ராஜபேரிகை '' நாவலில் இடம்பெற்றுள்ளது . தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னர்களுக்கு சொந்தமான இக்கோட்டையில் கி.பி. 1749 ல் மராட்டியருக்கும் ஆங்கிலேய படைக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்றது . இந்த போரின் போது சாதாரண சிப்பாயாக இருந்த இராபர்ட் கிளைவ்......பிறகு ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் தலைமை ஆளுனராக உயர்வடைய காரணமாக அமைந்து.
மேலும் இந்த கோட்டையில் மண்டபங்கள் அமைக்க தேவையான கற்களை மகேந்திரப்பள்ளி திருமேனி அழகர் கோயிலின் முன் மண்டபத்தை பிரித்து எடுத்து வந்து இக் கோட்டைக்கு தேவையான மண்டபங்களை அமைத்துள்ளனர்.தற்போது இங்கு சிதம்பரம் ,அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வரலாற்றுத்துறை சார்பாக மேற்கள ஆய்வு நடைபெற்று வருகிறது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக