கலை,இலக்கியம்,வீரம்,கொடை,ப
தமிழகத்தில் 99% பெயர்கள் காரணப் பெயரால் அமைந்தவை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில் வந்த பெயர் தான் இந்த "காவிரிப்பூம்பட்டினம்".பல ஊர்களின் மக்களை வாழவைத்தது போக மீதமுள்ள தண்ணீரை கூட கடலுக்கு தந்து விடும் காவிரி ஆறு கடலில் சங்கமிக்கும் இடத்தின் அருகில் அமைந்தது தான் இந்த அழகிய நகரம் ! !. காவிரியின் வடக்கு கரையோரம் அமைந்த இந்த நகரின் அழகை கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "சிலப்பதிகார" நூல் விவரிக்கிறது .
இந்த மூழ்கிய இந்த நகருடன் சேர்த்து இந்தியாவின் சில பகுதிகள்,இலங்கை,பர்மா,மாலத
இந்த நகரம் அழகான இரண்டு முக்கிய பிரதான ஊர்களை கொண்டிருந்தது. ஒன்று கடலோரம் இருந்த "மருவுர்பாக்கம்" மற்றொன்று இதன் மேற்க்கே அமைந்த "பட்டினப்பாக்கம்" .இந்த இரண்டு ஊர்களையும் பிரித்த ஒன்று இதன் குறுக்கே அமைந்த ஆக்கிய தேட்டங்கள், இந்த தோட்டத்து மர நிழலில் தான் தினமும் அங்காடிகள் நிறைந்த சந்தை நடைபெற்றது ! . இது இன்று உள்ள 24 மணி நேர அங்காடிகளை போன்று பகல், இரவு, முழுவதும் செயல்பட்டுள்ளது ! ! அப்படி என்றால் எவ்வளவு பெரிய முன்னேறிய நகராம இருந்திருக்கும் என்று சற்று எண்ணிப்பாருங்கள் ! !. பகல் அங்காடியின் பெயர் "நாளங்காடி" , இரவில் நடப்பது "அல்லங்காடி"
மருவுர்பாக்கம் :
ஏற்கனவே கூறி இருந்ததை போல கடற்க்கரை ஓரம் அமைந்த இந்த ஊரில் மாட மாளிகைகள் நிறைந்து காணப்பட்டது ! .இந்த இடத்தில் கடல் வழி வியாபாரிகள், வெளிநாட்டவர், என பலர் வாழ்ந்துள்ளனர் ! . இந்த ஊரை சுற்றி மீனவர்கள்,தறி நெய்பவர்கள்,பட்டு வியாபாரிகள்,மீன்,கறி வியாபாரிகள்,பானை,தானியங்கள
பட்டினப்பாக்கம் :
இங்கு அரச குடும்பம், அரசுத் துறை உயர் அதிகாரிகள்,பணக்கார வியாபாரிகள், விவசாயிகள்,மருத்துவர்,ஜோதி
இங்கு ஐந்து மன்றங்கள் இருந்துள்ளது
(௧) வெள்ளிடை மன்றம் (௨) எலாஞ்சி மன்றம் (௩) நெடுங்கல் மன்றம் (௪) பூதச்சதுக்கம் மட்டும் (௫) பாவை மன்றம்
இந்த ஊரில் இருந்த தோட்டங்கள்
(௧) இளவந்திச்சோலை (௨) உய்யணம் (௩) சன்பதிவனம் (௪) உறவனம் மற்றும் (௫) காவிரிவனம் போன்ற தோட்டங்கள் இந்த ஊரை மேலும் அழகுப்படுத்தியது.
பட்டினப்பாலை என்ற சங்க நூல், இந்த நகரின் அழகை பல இடங்களில் விவரிக்கின்றது.அடுக்கு மாடிகளை அப்போதே கொண்ட இந்த நகரில், ஏணிகள் மற்றும் மரப் படிகளால் மேல் மாடிக்கு சென்றுள்ளனர் ! ! . நகரின் எல்லா இடங்களிலும், பல வடிவங்களில் சோழர் கொடிகள் பரந்த வண்ணம் இருந்துள்ளது.
இந்த உலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் "சுனாமி" வடிவில் வந்தது இந்த நகருக்கு அழிவு .சுமார் 1500 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய ஆழிப்பேரலையால், இந்த நகரை உரு தெரியாமல் அழித்துவிட்டு சென்றது .
"மணிமேகலை" நூலில் ஒரு இடத்தின் அழிவை இப்படி விவரிக்கின்றது.அதாவது " வருடா வருடம் தவறாமல் " இந்திர விழா " கொண்டாடும் சோழ மன்னன் ,அந்த ஆண்டு கொண்டாடதால் கடவுளின் கோபத்துக்கு ஆளாகி அவனின் நகரை அழித்ததாகக் கூறுகின்றது .
இங்கு கிடைக்கப்பெற்ற சில தொன்மையான பொருட்களை கொண்டு இந்த ஊரில் " சிலப்பதிகார அருங்காட்சியகம் " ஒன்று தொடங்கப்பட்டு, நம் பண்டைய தமிழர்களின் கலாசாரத்தை இன்னமும் பிரதிபலித்துக் கொண்டுள்ளது ! . இங்கு ஆராய்சிகள் மேற்கொள்ளப்பட்டால் இன்னுமும் வெளிவராத நம் பெருமைகள், வெளி வர வாய்ப்புள்ளது ! ! . தமிழர்கள் அனைவரும் இந்த அருங்காட்சியகத்திற்கு சென்று நம் வரலாற்றை காண வேண்டும்.அதே போன்று நமக்கு பின் வருபவர்களுக்கும் நம் வரலாற்றை கற்பிப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை .தேடல் தொடரும்.
நன்றி : தோழர் . சசி தரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக