தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 28 மே, 2014

செரிமானக் கோளாறை ஏற்படுத்தும் உணவுகள்!

நாவின் சுவைக்காக கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களை நம்மை மறந்து அவ்வப்போது வாங்கி சாப்பிடுகிறோம்.
அப்படி சாப்பிடும் சில உணவுகள் எளிதில் செரிமானமடையாமல், வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடுகிறது.
அந்த வகை உணவுகள் சில கொடுக்கப்பட்டுள்ளன,
ஐஸ் க்ரீம்
குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருமே ஐஸ் க்ரீமை ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள். அத்தகைய ஐஸ் க்ரீம் கூட எளிதில் செரிமானமாகாமல், வயிற்றை உப்புசத்துடன் வைத்துக் கொள்ளும்.
பருப்பு வகைகள்
பருப்புக்களில் ஒரு வகையான சர்க்கரையானது உள்ளது. எனவே தான் பருப்பு சிறிது சாப்பிட்டாலும் வயிறு நிறைந்திருப்பது போல் உள்ளது. மேலும் இந்த மாதிரியான உணவுப் பொருளை இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது.
காரமான உணவுகள்
காரமான உணவுகள் நாவிற்கு மிகவும் பிடித்தவையாக இருந்தாலும், அவற்றில் உள்ள காரமானது வயிற்றுச் சுவர்களை பாதித்து, வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.
வறுத்த உணவுகள்
எண்ணெயில் போட்டு வறுத்த உணவுகளில் கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், இவற்றை உட்கொண்டாலும், அவை எளிதில் செரிமானமடையாமல், தொந்தரவை ஏற்படுத்தும்.
மசித்த உருளைக்கிழங்கு
மசித்த உருளைக்கிழங்கில் ஸ்டார்ச் அதிகம் உள்ளதால், இதனை எடுத்துக் கொண்டாலும், எளிதில் செரிமானமடையாது.
பச்சை வெங்காயம்
வெங்காயத்தை பச்சையாக சாப்பிடும் போது, உற்பத்தி செய்யப்படும் வாயுவானது வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தும்.
காலிஃப்ளவர்
காலிஃப்ளவரில் நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஆனால் அவற்றில உள்ள ரஃபினோஸ் என்னும் சர்க்கரை, எளிதில் செரிமானமடையாமல் தடுக்கும்.
சீஸ்
சீஸில் புரோட்டீன், கொழுப்பு மற்றும் லாக்டோஸ் அதிக அளவில் நிறைந்திருப்பதால், சீஸ் உள்ள உணவுப் பொருட்களை உட்கொண்டால், நீண்ட நேரம் வயிறு நிறைந்துள்ளது.
மாட்டிறைச்சி
மாட்டிறைச்சியில் புரோட்டீன் மற்றும் கொழுப்பு எண்ணற்ற அளவில் உள்ளதால், இவையும் எளிதில் செரிமானமடையாது.
பால்
பாலில் புரோட்டீன், கொழுப்புக்கள் மற்றும் லாக்டோஸ் அதிகம் இருப்பதால், இவற்றை உட்கொண்டாலும், அவை எளிதில் செரிமானமாகாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக