வறுமையான சூழலில் பிறந்தார் இவர் ; அப்பாவை இளம் வயதிலேயே இவர் இழந்துவிட அண்ணன் வேலைபார்த்து இவரை படிக்க வைத்தார் .மின்சாரம் இல்லாத அக்காலத்தில் தெரு விளக்கில் ஒண்டி படித்தார் .ஒரே டிராயர், சட்டை, ஒருவேளை மட்டும் சாப்பாடு மட்டுமே வாழ்க்கைக்கு வாய்த்தது .அந்த ஒருவேளை சாப்பாட்டையும் இவரே தான் சமைக்க வேண்டும் இப்படி படித்தே பி ஏ பட்டம் பெற்றார் .அரசாங்க வேலைகள் காத்துக்கொண்டிருந்த பொழுதே நாட்டுப்பணியே முக்கியம் என எண்ணினார் .காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் ;அங்கே மிதவாத போக்கை கடைபிடித்தார் .வன்முறை இல்லாத போராட்ட முறைகள்,இருக்கும் அரசுநிர்வாகத்தில் மாற்றம் என குறிக்கோள் கொண்டு செயல்பட்டார். நேரடி போராட்டத்தின் மூலம் விடுதலை வேண்டும் என்பது திலகரின் கோஷமாக இருந்தது . குழந்தைத்திருமணத்தை தடை செய்யும் ஆங்கிலேய அரசின் சட்டத்தை இவர் ஆதரித்தார் .இந்துக்களின் நம்பிக்கைகளில் தலையிடுகிறார்கள் என அச்சட்டத்தை திலகர் நிராகரித்தார் .சுதேசி இயக்கம் வங்கப்பிரிவினையால் எழுந்தது. அதை வங்கத்தொடு முடித்துக்கொள்ள வேண்டும் என்று இவர் சார்ந்திருந்த மிதவாத குழுவும்,அதை நாடு முழுக்க நடத்த வேண்டும் என்று திலகர் தலைமையிலான தீவிரவாதிகள் குழுவும் வாதிட்டன. மோதல் வலுத்தது ;இனிமேல் இணைந்து செயல்பட முடியாது என காங்கிரஸ் இரண்டு பிரிவாக உடைந்தது.மிதவாதிகளின் பிரிவுக்கு இவர் தலைமை தாங்கினார் ;சமூகத்தின் சேவகர்கள் எனும் அமைப்பை தொடங்கினார் . அதில் சேர்ந்தவர்கள் தங்களின் சொத்துக்களை நாட்டுக்கு எழுதி வைத்து விடவேண்டும் .இந்த அமைப்பு கல்வியறிவை எளிய மக்களுக்கு போதித்தது நடமாடும் நூலகங்களைஒருங்கிணைத்தது,பல
நன்றி - பூ.கொ.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக