அமெரிக்க நிறுவனம் மணிக்கு 72 கி.மீற்றர் வேகத்தில் பறக்கும் மோட்டார் சைக்கிளை தயாரித்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு நிறுவனம் விமானம் போன்று பறக்கும் மோட்டார் சைக்கிளை தயாரித்துள்ளது.
இதற்கு ‘ஏரோ எக்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதன் சக்கரங்கள் விமானங்களில் இருப்பது போன்று ஏறி இறங்க கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஓடுதளம் தேவையில்லை. இருந்த இடத்தில் இருந்தே தரையில் இருந்து எழும்பி பறக்க முடியும். இது தரையில் இருந்து 10 அடி உயரத்தில் 72 கி.மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் படைத்தது.
அதில், விமானி தவிர 2 பேர் பயணம் செய்யலாம். 140 கிலோ எடையுள்ள பொருட்களை சுமந்து செல்லும். ஒரு தடவை எரி பொருள் நிரப்பினால் 75 நிமிடங்கள் பறக்கும்.
அதன் விலை ரூ.50 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை ரூ.3 லட்சம் கொடுத்து முன்பதிவு செய்யலாம் என இணைய தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் தயாரிப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. 2017–ம் ஆண்டு விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக