செவ்வாய் கிரகத்தில் எவரஸ்டை விட 2 மடங்கு பெரிதான எரிமலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் ஏராளமான எரிமலைகள் இருப்பது ஏற்கனவே தெரிந்த ஒரு விடயமாகும்.
தற்போது இந்த கிரகத்தின் வடபகுதியில் ராட்சத எரிமலை ஒன்று இருப்பது அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த மலை இருக்கும் பகுதியை சுற்றி முழுவதும் எரிமலை சாம்பல் குழம்புகள் நிரம்பி இருக்கின்றன.
இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், இந்த எரிமலை இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தை விட 2 மடங்கு பெரிதானது என்றும் சூரிய குடும்பத்திலேயே இதுதான் பெரிய எரிமலையாக இருக்கும் எனவும் கூறியுள்ளனர்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக