தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 7 மே, 2014

கோடை காலத்திற்கு குளு குளு வீடு வேண்டுமா? இதை முயற்சி பண்ணுங்கள்!

கோடை காலம் ஆரம்பித்துவிட்டதால் வெளியில் சென்றால் வெயில் நம்மை வாட்டெடுக்கின்றது.
சரி வீட்டிற்கு வந்தாவது நிம்மதியாக களைப்பாறலாம் என்று பார்த்தால் வீட்டிலும் அனல் பறக்கிறது. எனவே கோடைகாலங்களில் வீட்டினை கூலாக வைத்துக்கொள்வதற்கு இதே சில டிப்ஸ்.
குப்பைகளை தூக்கிபோடுங்கள்
தேவையே இல்லாமல் நீண்ட நாட்களாக வீட்டிற்குள் அடைந்து கிடக்கும் பொருட்களை அப்புறப்படுத்துங்கள். அவை வீட்டிற்கு உள்ளேயே இருக்கக்கூடாது. முடிந்தால் அவற்றை விற்று விடுங்கள்.
காற்றோட்டமாக வைத்திருங்கள்
ஒரு பக்கம் வீட்டிற்குள் காற்று வந்தால், அது வேறொரு பக்கம் கண்டிப்பாக வெளியேற வேண்டும். அப்போது தான் வீட்டிற்குள் காற்றோட்டம் சீராக இருக்கும். காலை நேரங்களில் கதவு, ஜன்னல்களை நன்றாகத் திறந்து வையுங்கள்.
ஆனால், உச்சி வெயிலடிக்கும் போது, அவற்றை மூடிவிடுங்கள். இதனால் வெப்பமானது வீட்டில் இறங்காமல் இருக்கும்.
மெல்லிய திரைகளை உபயோகியுங்கள்
வெயிலின் தாக்கம் இல்லாமலிருக்க முரட்டுத் திரைத் துணிகளை சிலர் தங்கள் கதவு, ஜன்னல்களில் மாட்டியிருப்பர். அது தவறு. மெல்லிய திரைகளை மாட்டினால் தான் வீடு காற்றோட்டமாகவும் வெளிச்சமாகவும் இருக்கும்.
ஸ்விட்சுகளை ஆஃப் செய்யுங்கள்
தொலைக்காட்சி, மைக்ரோவேவ் ஓவன், ட்யூப்லைட் உள்ளிட்ட மின் சாதனங்கள் நிறைய வெப்பத்தைப் பரப்பும். ஆகவே அவற்றைப் பயன்படுத்தாத போது ஸ்விட்ச் ஆஃப் செய்துவிடுங்கள்.
செடிகள் வளருங்கள்
நம் வீட்டு மொட்டை மாடியிலோ, பால்கனியிலோ சிறுசிறு செடிகளை தொட்டியில் வளர்க்கலாம். இந்த பசுமையான செடிகள் கோடை வெப்பத்தைக் குறைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக