தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 9 ஜூன், 2013

பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர்தான் தென்னாட்டில் முதன்முதலில் ஹிந்திக்கு வித்திட்டவர்.


பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர்தான் தென்னாட்டில் முதன்முதலில் ஹிந்திக்கு வித்திட்டவர்.

இவர் 1922-ல் ஈரோட்டில் ஹிந்திப்பள்ளி ஒன்றை ஆரம்பிக்க இலவசமாக இடம் கொடுத்தார்.

திரு.வி.க.வின் வாழ்க்கைக் குறிப்புகள்" என்ற நூலில் பக்கம் 436ல்...

"இராமசாமி நாயக்கர் காங்கிரசில் தொண்டாற்றிய காலத்தில் அவர் முயற்சியால்
ஈரோட்டில் ஹிந்தி வகுப்பொன்று நடைபெற்றது.திறப்பு விழாவுக்கு யானுஞ் சென்றிருந்தேன். தென்னாட்டில் ஹிந்திக்கு விதை இட்டவர் நாயக்கரே" என்று திரு.வி.க. அவர்கள் எழுதியுள்ளார்.

- ஆதிபிரகாஷ் (AathiPrakash Wehavetosavetamilpeople)

தமிழர்களுக்குள் ஹிந்தியை திணித்தவர் பெரியார் அதனால்தான் தமிழை "காட்டுமிராண்டி மொழி" "நீச மொழி" என்று சொன்னார்.

இப்படி சொல்லியவாரே.... தமிழ் எழுத்துக்களில் சீர்திருத்தம் என சொல்லி தமிழ் எழுத்தை திருத்தினார்.

தமிழ் புலமையோ; தமிழ் இலக்கிய அறிவோ; தமிழ் எழுத்தின் பரிணாம வளர்ச்சி பற்றியும் சிறு ஆராய்ச்சி அறிவும் இல்லாத பெரியார்;

ஹிந்தியை வளர்க்க தமிழை அழிக்க நினைத்த பெரியாரின் கிறுக்கள்களை தமிழ் எழுத்துக்களாய் ஆக்கியது திராவிடக் கட்சிகளின் அரசுகள்..

தமிழ் வளருமா..தமிழர் நாடு மலருமா?

பகிர்தல் : ஆர்.தியாகு
 — 

தமிழை முதலில் சிதைத்தவர் இத்தாலியில் இருந்து வந்த வீரமாமுனி என்ற புனைபெயர் கொண்டவர்,அதன் பின்னால் வந்து இஸ்ரத்துக்கு விளையாடிய அந்நியரில் திராவிட இன தெலுங்கு கன்னடர் ராமசாமி,அண்ணா,கருணாநிதி.எம்ஜிஆர் ,ஜெயலலிதா ..என தொடர்கின்றதே!இன்று தமிழை வாசிக்க மொழிபெயர்ப்பாளர் வேண்டுவது இவர்கள் தமிழுக்கு ஆற்றிய சேவையால்!!

Asokan Sivavadivel தகவல் தவறில்லை. ஆனால் பெரியார் காங்கிரசில் இருந்தபோது செய்தவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. தமிழை 20 எழுத்துகள் 9 குறியீடுகளைக் கொண்டு எழுத முடியும். கற்பது, தட்டசசு செய்வது எளிதாகும் என்று நான் சொன்னால் ஏராளமானோர் சண்டைக்கு வருவர்

ஆர். தியாகு Varghese Alphonse 
நீங்கள் சொல்வது திமுக சொன்ன மழுப்பல்!! ஒரு விசயம் சொல்லுக்களேன் "துக்ளக்" வார இதழ் தெரியும் தானே? 
1970 இல் ஆரம்பித்த துக்ளக்கில் பயன் படுத்தியது.. அதில் மட்டுமே பழைய தமிழ் எழுத்துக்கள் வந்தது, துக்ளக் மட்டுமே பழைய எழுத்துக்களை அச்சில் பயன் படுத்தினார்..சாதாரண பத்திரிக்கை செய்ய முடிந்ததை திமுக அரசால் செய்யமுடியவில்லையா..தமிழக அச்சுக்களில் மட்டும் பிரச்சனை வந்ததா..? சீனா எழுத்துக்களை விடவா..தமிழ் அச்சு வடிவில் வர சிக்கலிருந்தது????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக