தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 7 ஜூன், 2013

இதய ஆரோக்கியத்திற்கு .


இதய ஆரோக்கியத்திற்கு .

அனைவருமே ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் என்னும் ஊட்டச்சத்தினைப் பற்றி கேட்டிருப்போம். எந்த ஒரு ஆரோக்கியத்தை பற்றிய செய்திகளை படிக்கும் போதும், இந்த உணவுகளில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது என்று பல முறை குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் சிலருக்கு இந்த ஊட்டச்சத்தினால் என்ன நன்மை விளையும் என்று தெரியாது. உண்மையில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் என்பது ஒரு கொழுப்பு. கொழுப்பு என்றதும் எப்படி இதனை சாப்பிடக்கூடும் என்று கேட்கலாம்.

பொதுவாக கொழுப்புக்களில் இரண்டு வகைகள் உள்ளன. அவற்றில் கெட்ட கொழுப்பு மற்றும் நல்ல கொழுப்பு. கெட்ட கொழுப்பானது இதயத் தமனிகளில் தங்கிவிடும். ஆனால் நல்ல கொழுப்பானது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். அந்த வகையில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் ஒரு கொழுப்பாகும். எப்படியெனில் இவை, தமனிகளில் தங்கியிருக்கும் கெட்ட கொழுப்புக்களை கரைத்து, இதயத்திற்கு செல்லும் இரத்த குழாயை மென்மையாக எந்த ஒரு இடையூறு ஏற்படாத வகையில் பாதுகாக்கும்.

எனவே தான், ஆரோக்கியத்தைப் பற்றிய பல செய்திகளில், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்று கூறுகின்றனர். மேலும் இந்த ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்த உணவுகள் இதயத்திற்கு மட்டுமின்றி, முதுமையைத் தள்ளி போடுதல் மற்றும் மூளையின் ஆரோக்கியத்திற்கும் நல்லது. பெரும்பாலும், இந்த சத்து மீன்களில் மிகவும் அதிகமாக இருக்கும். இருப்பினும், சைவ உணவாளர்கள் எப்படி இதனை சாப்பிடுவார்கள் என்பதால், சைவம் மற்றும் அசைவ உணவாளர்களுக்கு ஏற்றவாறு இந்த சத்து நிறைந்த சில உணவுகளை பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போம்.

மீன்
பொதுவாக அனைத்து வகையான மீன்களிலும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருக்கும். ஆனால் சால்மன் மற்றும் சூரை மீனில், இந்த சத்து அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது.

ஆளி விதை
சைவ உணவாளர்களுக்கு ஆளி விதை சரியான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்த உணவாக இருக்கும். மேலும் இதில் இதய ஆரோக்கியத்திற்கு தேவையான EPA மற்றம் DHA என்னும் ஃபேட்டி ஆசிட்டுகளும் உள்ளன.

ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயிலில் அதிகமான அளவில் நல்ல கொலஸ்ட்ரால் உள்ளது. இருப்பினும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், விர்ஜின் அல்லது பதப்படுத்தபடாத ஆலிவ் ஆயிலில் தான் நல்ல அளவில் உள்ளது.

வால்நட்
வால்நட்டில் இரண்டு வகையான முக்கிய சத்துக்கள் வளமாக உள்ளன. அவை வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட். எனவே இதனை சாப்பிட்டால், இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு, சருமத்தில் விரைவில் தோன்றும் முதுமைத் தன்மையும் தள்ளிப் போகும்.

முட்டை
முட்டையிலும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளது. முட்டையைப் பற்றிய ஒரு கட்டுக்கதையில் முட்டை இதயத்திற்கு ஆரோக்கியமானது அல்ல என்று சொல்லப்படுகிறது. ஆனால், பெரும்பாலான நல்ல கொலஸ்ட்ரால் முட்டையில் உள்ளது. எனவே இது இதயத்திற்கு நல்ல ஒரு உணவே.

ஆட்டு இறைச்சி
புற்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. எனவே புற்களை அதிகம் சாப்பிடும் ஆட்டு இறைச்சியை சாப்பிட்டால், அதன் மூலம் உடலுக்கு வேண்டிய ஃபேட்டி ஆசிட்டுகளை பெறலாம்.

கனோலா ஆயில்
ரேப்சீடு எண்ணெயை பதப்படுத்தப்பட்டு கிடைப்பது தான் கனோலா ஆயில். இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் எண்ணெய்களில் முக்கியமானது. ஏனெனில் இதில் நல்ல கொலஸ்ட்ரால் வளமாக உள்ளது.

கடல் உணவுகள்
கடல் உணவுகளான இறால், நண்டு, கடல் சிப்பி போன்றவற்றிலும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக நிறைந்துள்ளது. எனவே இதனை வாரத்திற்கு ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

அவகேடோ
அவகேடோவில் நிறைய உடல்நல நன்மைகள் நிறைந்துள்ளன. ஆகவே இதனை சாப்பிட்டால், இதன் ஒரு பழத்தில் மட்டும் 250 மில்லிகிராம் நல்ல கொலஸ்ட்ராலை பெறலாம்.

பூசணிக்காய் விதைகள்
ஆளி விதைக்கு அடுத்தப்படியாக நல்ல அளவில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருப்பது, பூசணிக்காய விதைகளில் தான்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக