காதலில் ஏமாந்த நடிகைகள்.
ஒரே துறையில் இருப்பவர்கள் காதல் வயப்படுவது கலியாணம் செய்து கொள்வது இயல்புதான்.
தமிழ்ச்சினிமாவுக்கு காதல் அந்நியப்பட்டதல்ல.ஊமைப்படமாக இருந்த காலத்தில் உள்ளத்துக்குள்ளேயே காதலை வளர்த்துக் கொண்டார்கள்.பேசும் படமாக அடுத்த பரிணாமத்தை தொட்டபோது காதலும் பேசத்தொடங்கியது ஆனால் .எல்லோருடைய காதலும் வெற்றி பெற்றதில்லை.
காரணம் ?
அனுசரித்து போதல் என்பதற்கு தமிழ்ச் சினிமாவில் மற்றொரு அருத்தமும் உண்டு.அந்த அனுசரித்தலை விரும்பாத நடிகையர் அதிலிருந்து விடுபடுவதற்காக காதலில் வீழ்வார்கள்.அதை சிலர் பயன் படுத்திக் கொள்வார்கள்.நடிகையரும் அதை உண்மையென நம்பி தன்னை இழப்பது வழக்கம்.சமீபத்திய சான்று ஜியா கான்.
இந்திப்பட உலகில் குருதத் .இவர் சிறந்த நடிகர்.இன்றும் பேசப்படுகிறவர்.காதலில் தோல்வி.தாங்கமுடியவில்லை.இன்னுயிரை இழந்தார்.
பர்வீன் பாபி செத்து 3 நாட்களுக்கு பிறகுதான் அவரது சாவு உலகத்திற்கு தெரிந்தது.இன்று உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகரை நேசித்து தோற்று முகம் மாறி இறந்து கிடந்தார்.
திவ்ய பாரதி ,சிலுக்கு சுமிதா இவர்களின் தற்கொலைக்கும் காதல் தோல்விதான் காரணம்.
படாபட் ஜெயலட்சுமி தமிழ்ச்சினிமாவின் முடிசூடா மன்னர்களில் ஒருவரின் உறவினரை காதலித்தார்.கை கூட வில்லை.தற்கொலை !
ஷோபா 17 வயதிலேயே தூக்கில் தொங்கிவிட்டார்.
திவ்யபாரதி தற்கொலை செய்த போது 19 வயது.
22 வயதில் மயூரி மாண்டார்.அவ்வளவு சிறிய பருவத்தில் சாவதற்கு துணிந்தார்கள் என்றால் ஏமாற்றம் எந்த அளவுக்கு அவர்களை அறுத்திருக்க வேண்டும்?
பிரத்யுஷா காருக்குள் நச்சருந்தி செத்தார்,சிம்ரனின் தங்கை மோனல் தற்கொலை செய்து கொண்டதற்கும் காதல் தோல்விதான் காரணம்.கோழி கூவுது விஜி உதவி டைரக்டர் ஒருவரை காதலித்து ஏமாற்றம் அடைந்து உயிர் இழந்தார்.
இத்தனையும் எதற்காக சொல்கிறேன் என்றால் காதலித்து பின்னர் ஏமாற்றுகிறவர்கள் தண்டிக்கப்படுவதில்லை .அரசியல் ,பணம் ,செல்வாக்கு அவர்களை காப்பாற்றி விடுகிறது.

காரணம் ?

பர்வீன் பாபி செத்து 3 நாட்களுக்கு பிறகுதான் அவரது சாவு உலகத்திற்கு தெரிந்தது.இன்று உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகரை நேசித்து தோற்று முகம் மாறி இறந்து கிடந்தார்.
திவ்ய பாரதி ,சிலுக்கு சுமிதா இவர்களின் தற்கொலைக்கும் காதல் தோல்விதான் காரணம்.
படாபட் ஜெயலட்சுமி தமிழ்ச்சினிமாவின் முடிசூடா மன்னர்களில் ஒருவரின் உறவினரை காதலித்தார்.கை கூட வில்லை.தற்கொலை !
ஷோபா 17 வயதிலேயே தூக்கில் தொங்கிவிட்டார்.
திவ்யபாரதி தற்கொலை செய்த போது 19 வயது.
22 வயதில் மயூரி மாண்டார்.அவ்வளவு சிறிய பருவத்தில் சாவதற்கு துணிந்தார்கள் என்றால் ஏமாற்றம் எந்த அளவுக்கு அவர்களை அறுத்திருக்க வேண்டும்?

இத்தனையும் எதற்காக சொல்கிறேன் என்றால் காதலித்து பின்னர் ஏமாற்றுகிறவர்கள் தண்டிக்கப்படுவதில்லை .அரசியல் ,பணம் ,செல்வாக்கு அவர்களை காப்பாற்றி விடுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக