வாழைப்பழத்தால் சோளம் வறுப்பதெப்படி..???
இந்தப் பரந்த உலகத்தினில் எமக்குத் தெரியாமல் எத்தனை விசயம் பரந்து கிடக்கிறது. எப்போதோ ஒரு நாள் ஒரு நண்பன் கேட்டான் “வாழைப்பழத்தில் கதிர்வீச்சு (radiation) இருக்குதாமே உனக்குத் தெரியுமா தெரிந்தால் எழுதேன்” என்றான். ஆனால் எனக்கும் அவன் நிலமை தான் இப்படிக் கேட்ட விசயமே தவிர பெரிதாய் அறிந்திருக்கவில்லை. அப்படியிருக்கையில் எப்படி எழுதுவது என்று விட்டு விட்டுவிட்டேன் (விஞ்ஞானியே பரிசோதனை முடித்து விட்டீரா..?? முடிவை காட்டென்றால் நான் என்ன செய்ய). ஆனால் கொஞ்சமாய் தெரிந்ததை சொல்லுறேனுங்க.......
பல தாவரப் பொருட்களில் கதிர்வீச்சு இருக்கிறது எனக் கண்டபிடிக்கப்பட்டாலும் அதிலே நாங்கள் அதிகமாக அறிந்திருப்பது வாழைப்பழம் மட்டுமே ஆகும். சாதாரணமாகவே வாழைப்பழத்தில் பொட்டாசியம் (K-40)அதிகமாகக் காணப்படுகிறது. இதில் காணப்படும் இயற்கை பொட்டாசியம் (அண்ணளவாக 0.0117%) தான் இதன் கதிர் வீச்சுக்குக் காரணம் என்று குறிப்பிடுகிறார்கள். ஒரு கிலோகிராம் வாழைப்பழத்தில் 3520 பிகோகியுறிஸ் (3520 picocuries per kg) என்ற அளவில் கதிர்வீச்சு இருக்கிறது. இது பாலில் ஒரு லிற்றருக்கு 20 பிகோகியுறிஸ் (20 picocuries/liter) என்ற அளவில் இருக்கிறது.
அவரை
வாழைப்பழத்தை விட அவரை, சூரியகாந்தி விதை, சோளம் போன்றவற்றிலும் காணப்படுகிறது. முக்கியமாக பிறேசில் கச்சானில் 12,000 picocuries per kg என்ற அளவில் இருக்கிறது.
brazil nuts
என்னடா இவன் இப்படி வெருட்டிவிட்டுப் போகிறானே இதை இனி சாப்பிடக் கூடாதா என நினைக்காதிங்க இதை விட பன்மடங்கு கதிர்வீச்சுக் கூடிய சூழலில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நகரத்தை அக்கிரமித்திருக்கும் தொலைத்தொடர்பு கோபுரங்களே பலமடங்கு கதிரை வெளிவிடக் கூடியது. அவற்றுடன் ஒப்பிடும் போது இவை எல்லாம் சாதாரணம் தான்.
சரி தானே என்று நான் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டால் முண்டியடித்துக் கொண்டு வந்தடுவாங்கப்பா அதால தான் கீழே ஒரு காணொளி கொடத்திருக்கிறென் அதிலே பார்த்தால் இதன் ஆதாரம் தெரியும். இதில் நடக்கும் சம்பவத்திற்கு இரண்டு பொருட்களிடையேயும் இருக்கும் கதிர்விச்சு காரணமாக இருக்கலாம்.
INCROYABLE : les dangers d'une banane!
FOR ENGLISH PEOPLE : Put three bananas under that angle and some pop corn in the centre. Wait a couple of seconds and check out the result: its scary isn't i...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக