தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, June 22, 2013

மெக்சிகோ வனப்பகுதியில் மாயன் காலத்து நகரம் கண்டுபிடிப்பு!


மெக்சிகோ சிட்டி: மனிதகுலம் தோன்றியது முதல் எத்தனையோ நாகரிகங்கள் தோன்றி மறைந்திருக்கின்றன. இதில் வரலாறு இன்றும் பேசக் கூடிய நாகரிகமாக இருப்பது லத்தீன் அமெரிக்க நாடுகளில் உயிர்ப்போடும் பெருமிதத்தோடும் உலவிய மாயன் நாகரிகம்தான்..

 மாயன்கள் அனைத்து துறைகளிலும் ஆளுமை செலுத்தியவர்களாக இருந்திருக்கின்றனர். மாயன் இனமானது எதிரிகளுடனான போரிலும் இயற்கை சீற்றங்களாலும் அப்படியே மறைந்து போயின. மாயன் நாகரிகம் கடைபிடித்த காலண்டர் முறை 2012ஆம் ஆண்டுடன் முடிவடைந்து போனதால் உலகமே அழியப் போகிறது என பெரும் பீதியே அண்மையில் உருவாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மாயன் இனத்தவரது கைவிடப்பட்ட நகரங்களை தேடும் தொல்லியல் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இதன் ஒருபகுதியாக ஸ்லோவேனியா நாட்டு தொல்லியல் அறிஞர் இவான் ஸ்ப்ராஜிக் தலைமையிலான மெக்சிகோ இனவியல் கல்வி நிறுவன வல்லுநர்கள் தென்கிழக்கு மெக்சிகோவில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். அவர்கள் முயற்சி வீண்போகவில்லை..


தென்கிழக்கு மெக்சிகோவின் கம்பெசி மாநிலத்தில் அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே 54 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடந்த மாயன் காலத்து பெயர் தெரியாத நகரை ஸ்ப்ராஜிக் குழுவினர் கண்டுபிடித்திருக்கின்றனர்.இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மாயன் நாகரிக காலத்து நகரங்களிலேயே இதுவே மிகப் பெரியதாகவும் கருதப்படுகிறது.

இந்த நகரத்தில் மாயன் காலத்து 10 கல்வெட்டுகள், ஏராளமான நினைவுச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.தற்போது கண்டறியப்பட்டிருக்கும் இந்த நகரம் கிமு 600-900 ஆம் ஆண்டு காலத்தையவாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
http://www.kokuvilnc.com/2013/06/mayan.html

No comments:

Post a Comment