தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 7 ஜூன், 2013

கருவில் உள்ள குழந்தை பற்றிய சுவாரஸ்யங்கள்


கருவில் உள்ள குழந்தை பற்றிய சுவாரஸ்யங்கள்

தாயின் கர்ப்பத்தில் இருக்கும் கரு குழந்தை கனவு காணும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்து செய்தி வெளியிட்டனர். அதேபோல கரு குழந்தை தாயிடம் இருந்து உணவை எடுத்துக்கொள்ளும் போது அது ருசியை உணரும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்

கரு குழந்தைக்கு கசப்பு, துவர்ப்பு ஆகிய சுவைகள் பிடிப்பதில்லை என்றும் தெரியவந்திருக்கிறது. கர்ப்பத்தில் உள்ள சிசுவின் வளர்ச்சி, தாயின் மனநிலையை பொருத்தது என்று அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்ப்பிணிகள் எப்போதும் நல்ல சிந்தனை, ஆரோக்கிய உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நல்ல, இனிமையான இசையை கேட்க வேண்டும் என்கிறார்கள் டாக்டர்கள்.

பொதுவாக கர்ப்ப காலத்தில் தாயையும், கருவில் வளரும் குழந்தையும் கவனமாக பார்த்துக் கொள்ளவேண்டியது அவசியம். கருவில் இருக்கு குழந்தைக்கு எதுவும் தெரியாது என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

உணர்வுகள் புரியும்
ஆனால் கரு குழந்தை கனவு காணும், இசையை ரசிக்கும், அதற்கும் உணர்வு உண்டு, சுவை கூட அறியும் என்று கண்டறிந்திருக்கின்றனர் ஆய்வாளர்கள். இந்த கட்டத்தில் கருவில் உள்ள சிசுவுக்கு தாயின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளும் திறன் உள்ளதை பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

ஆரோக்கியமான குழந்தை
கர்ப்ப காலத்தில் கருவில் உள்ள சிசுவுக்கு உணவும் தாயின் மூலமே கிடைப்பதால் தாய் ஊட்ட சத்துள்ள உணவுகளை எடுத்து கொள்வது ஆரோக்கியமான குழந்தை பிறக்க வழிவகுக்கும் என்கின்றனர் மருத்துவர்கள் இதை ஆய்வுப் பூர்வமாக நிரூபித்துள்ளனர். அமெரிக்காவின் பிலடெல்பியாவில் உள்ள மோன்னெல் என்ற மருத்துவ ஆராய்ச்சி மையம் இதுகுறித்த ஆய்வை மேற்கொண்டது. டாக்டர் மோனெல்லா தலைமையில் நடந்த இந்த ஆய்வில், 6 மாதம் முதல் ஒரு வயது வரை உள்ள 46 குழந்தைகளின் பிடித்தமான உணவு சுவை குறித்து அலசி ஆராயப்பட்டது. கர்ப்ப காலத்தில் தாயின் உணவு முறை குறித்தும் இந்த கணக்கெடுக்கப்பட்டது.

சத்தான உணவுகள்
கர்ப்பத்தில் உள்ளபோதே சிசுவுக்கு காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றின் உப்பு, இனிப்பு, சுவைகளை அறியும் திறன் இருக்கிறது. கர்ப்பத்தில் இருக்கும் போது கிடைக்கும் சுவையையே குழந்தை பிறந்து வளரும் போது அதிகம் விரும்புகிறது என்று சமீபத்திய ஆய்வில் உறுதியாகி உள்ளது.

சுவையும் நறுமணமும்
கர்ப்ப காலத்தில் தாய் எடுத்துக் கொண்ட உணவு வகைகளில் குழந்தைகளுக்கு அதிக நாட்டம் இருந்தது உறுதியானது. குறிப்பாக அதிக அளவில் கேரட் எடுத்துக் கொண்டவர்களின் குழந்தைகளுக்கு அந்த சுவை மற்றும் நறுமணத்தில் அதிக நாட்டம் இருந்தது.

கசப்பு,துவர்ப்பு பிடிக்காது
இதே போன்று பலவிதமான காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு குழந்தைகளின் பிடித்தமான சுவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் எதிர்பார்த்த வெற்றி கிட்டியது. அதேசமயம் கசப்பு, துவர்ப்பு சுவைகள் கர்ப்பத்திலேயே குழந்தைகளுக்கு பிடிப்பதில்லை என்பதும் ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.

எல்லா சுவையும் கொடுங்க
இதன் மூலம் கர்ப்பத்தில் உள்ள சிசுவுக்கு சரிவிகித ஊட்டச்சத்து அளிக்க வேண்டியதன் அவசியம் தெளிவாகி உள்ளது. இனிப்பு, புளிப்பு, காரம், உவர்ப்பு, துவர்ப்பு, கசப்பு என எல்லா விதமான சுவைகளையும் கர்ப்ப காலத்தில் சிசுவுக்கு அறிமுகப்படுத்த வேண்டியது தாயின் கடமை என்கிறார் டாக்டர் மோனெல்லா. அதேபோல பிறந்த பின்பும் தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கனவு கண்டு சிரிக்கும்
கருவில் உள்ள குழந்தை கனவு கண்டு ரசிக்கும் என்றும் ஏற்கனவே ஆய்வாளர்கள் ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளனர். இந்த நிலையில் கருவில் உள்ள குழந்தை ருசி அறியும் என்றும் ஆய்வில் நிரூபித்துள்ளனர். எனவே கருவுற்றிருக்கும் போது தாய் நல்ல மனநிலையுடன் இருப்பதோடு சுவையான உணவுகளை உட்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் நம்முன்னோர்கள் முன்னரே நிரூபித்துள்ளனர். 3 மாதம் தொடங்கி பிரசவம் வரை வகை வகையான உணவுகளை சுவையாக சமைத்துக் கொடுப்பதும் அதனால்தான்.
 (5 photos)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக