தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 7 ஜூன், 2013

புவி வெப்பமடைதலை தடுபோம்!!


புவியின் உயிர்த்துடிப்பிற்கு ஆதாரம் சூரிய ஒளி. இதனடிப்படையில் உயிர்பெருக்கம் செய்து தாவரங்கள் சூரிய ஒளியை ஆற்றலுக்குத் தேவையான உயிர்சத்துக்களாக மாற்றுகின்றன. தாவரங்களின் இச் செயல்பாடுகளினாலேயே உலகின் எல்லா உயிர்களும் உயிர்வாழ முடிகிறது. மண், காற்று, நீர், இவற்றோடு வெளியின் உதவியோடு தாவரங்கள் உயிர்சத்துக்களை தன்னுள் சேமிக்கின்றன. இவ்வாறு சேமிக்கப்பட்ட தாவரங்களின் பகுதிகளை நேரடியாக உண்டு சில உயிர்கள் உய்ர் வாழ்தலுக்குரிய ஆற்றலை பெறுகின்றன. அவ்வாறு பெறப்பட்ட ஆற்றலை உயிர் வாழ்வதற்குப் பயன்படுத்தியது போக மீதியை வேறு வடிவத்தில் தன்னுள் சேமிக்கின்றன. இப்படியான உயிர்களை வேட்டையாடி வேறு சில உயிர்கள் தங்கள் உயிர்வாழ்தலை நிலை நிறுத்திக் கொள்கின்றன. இவ்வாறாக பூமியின் உயிர் சுழற்சி வட்டம் ஒருவகை கண்ணிகளால் பிணைக்கப்பட்டிருக்கிறது. இந்த கண்ணிகளின் தொடர்பு ஏதோ ஓர் இடத்தில் அறுந்து போனாலும் ஒட்டு மொத்த உயிர்களின் வாழுதலில் சிக்கல்கள் உருவாவதற்கான சாத்தியங்கள் நிறையவே உள்ளன. தாவரங்கள் என்ற வகைபாட்டில் மரம், செடி, கொடி எனபனைத்தும் அடங்கும். தாவரங்களின் வகைபாட்டுகள் பெரும் எண்ணிக்கையில் வெப்பமண்டில பகுதியிலே அதிகம் காணப்படுகின்றன. குறிப்பாக வெப்பமண்டில பகுதியில் அமைந்துள்ள இந்தியாவில் இதற்கான வாய்ப்புகள் அதிகம். உலகின் இதர பகுதிகளை விட இந்தியாவில் காணப்படும் உயிரினங்களின் குறிப்பாக தாவரங்கள் அதாவது மரங்களின் வகைப்பாடுகள் அதிகம். காற்று மண்டிலத்தின் வாயு சுழற்சியில் மரங்களின் பங்கு பற்றி இங்கு அதிகம் பேச வேண்டியதில்லை. அது பற்றி நிறையவே தெரிந்து வைத்திருக்கிறோம். பல்நெடுங்காலமாக மரங்களின் முக்கியத்துவம் பற்றிய அறிவும், பாதுக்காக்கும் உணர்வும் இங்கு இருந்து வந்திருக்கின்றன. ஆனால் சமீப காலமாக இவை குறைந்து காணப்படுகின்றன. அவற்றுக்கு முக்கிய காரணம் மேலை நாடுகளில் உண்டான நாகரிகம், வளர்ச்சி என்ற பெயரில் உண்டான மாறுதல்களின் தாக்கமே ஆகும். ஒரு புள்ளிவிவரம் என்ன சொல்கிறது என்றால் அமெரிக்கர்களின் கழிவறை தேவைக்கான டிஸ்யூ பேப்பர் தேவைக்காக மட்டுமே கிழக்காசிய நாடுகளின் காட்டழிப்பில் 25% செலவாகிறதாம். இந்தியாவில் உருவாகும் குளிந்த காற்று தான் ஜப்பானின் பருவநிலையை சீராக வைத்திருக்குமாம் இன்றைய ஆராய்ச்சிகள் சொல்கின்றன. இந்தியாவின் மரங்களின் செழுப்பு தான் இந்த குளிர்காற்றுக்கு பெரிது துணை புரிகிறதாம். ஜப்பானில் மரம் வளர்த்து பயன் இல்லை என்ற இயற்கையின் விதியை புரிந்து கொண்ட ஜப்பான் இந்தியாவில் மரம் வளர்க்க பெரும் நிதியினை கொடுத்து வருகிறது. உயிர் சுழற்சி வட்டத்தில் மரங்களின் முக்கியதுவம் உணர்ந்து மரங்களை காப்போம். காடுகளை பேணுவோம். புவி வெப்பமடைதலை தடுபோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக