தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 16 ஜூன், 2013

மாண்பு மிகு மண்டோதரி ,,,,



மாண்பு மிகு மண்டோதரி ,,,,

கனவில் அம்மா மண்டோதரி என்று என்னை அழைப்பதாய் நினைத்து கொண்டு பயந்து விழித்து எழுந்தேன் .அருகில் என் குழந்தை சீதையாய் சிரித்த முகத்துடனே அயர்ந்து உறங்கி கொண்டு இருந்தாள்.யார் இட்ட சாபமோ என்னவோ என் மகள் பிறந்ததில் இருந்து என்கணவருக்கு தொடர் அழிவுகள் துன்பங்கள் கஸ்ரங்கள் விதி வகுத்த வழியில் அவர் ஓடி ஓடி தேடியது அனைத்தையும் இழந்து அசோகவன சிறையில் சில வரிட அஞ்ஞாத வாசத்துக்கு பின்னர் .எங்களுடன் வந்து இணைந்து அவரும் மகளின் அருகில் அயர்ந்து உறங்கி கொண்டு இருந்தார் .நான் எழுந்து தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் உறங்குவதற்கு முயற்சித்தேன் ஆனால் எனக்கு சின்ன வயதில் இருந்து என் வாழ்க்கை ஞாபகம் என் கண்முன்னே நினைவு படமாக ஓடியது .

சரியாக ஞாபகம் இல்லை எழு எட்டு வயது இருக்கும் என்று நினைக்கின்றேன் .நாள் முழுக்க துள்ளி விளையாடி விட்டு காலையில் எழும்புவது எனக்கு மிகவும் சிரமமாய் இருக்கும் அந்த நாட்கள் .என் அம்மா என்னை மண்டோதரி என்று சிலமுறை அழைத்தே துயில் எழுப்புவார் .நான் சினந்து கொண்டு அம்மாவிடம் கோபித்து கொண்டே எழும்புவேன் .(எங்கள் வீட்டில் என் மச்சான் கும்பகர்ணனும் இருந்தான் அவன் பற்றி இன்னொரு சந்தர்பத்தில் சொல்லுகின்றேன் )ஆனால் அந்த வயதில் அம்மாவிடம் விளக்கம் கேட்கவில்லை நானாக சில விடயங்களை தவறாக ஊகித்துக்கொண்டேன் .ஆனால் இன்று தான் அம்மா என்னை இலக்கிய நாயகியை மாதோட்ட நன்னகர் நங்கையின் பெயரை சொல்லி சிறப்பாக அழைத்தார் என்று நினைத்து பெருமை படுகின்றேன் .

ஆமாம் இன்று என் சிந்தனைக்கு சிறப்பளித்த மாதரசி மாதோட்ட நன்னகர் மாயன் மகள் மண்டோதரி பற்றி சில விடயங்களை பகிர்ந்து கொள்ளலாம் நினைக்கின்றேன்.

நாகர்குலத்தில் பெண்ணெடுத்தால் நாட்டை ஆளலாம் என்பது என் கணிப்பு ஆமாம் கந்தபுராண சூரனின் மனைவி பதும கோமளையும் இராவணன் மனைவி மண்டோதரியும் நாகர் குலத்தை சேர்ந்த மங்கைகளே .மாதோட்ட நாகர்குல சிற்றரசை ஆண்ட மன்னன் தான் மயன் இவனே உலகின் தலை சிறந்த பொறியியல் ஆளன். உலகில் முதல் முதலில் விமானத்தை வடிவமைத்தவனும் மிகப்பெரிய ஆலயங்களை கட்டுவதற்கும் எகிப்திய பிரமிட்டுகளை அமைப்பதற்கும் தொழில் நுட்ப ஆலோசனைகளை வழங்கியவன் .இவனே வான சாஸ்திர நிபுணத்துவம் பற்றியும் அறிவியல் விஞ்ஞான ஆராய்சிகள் பற்றியும் குறிப்புக்களை முதன் முதலில் எழுதி வைத்தவன் .இன்றைய விஞ்ஞான உலகம் இவனது கண்டு பிடிப்புக்களுக்கே தாங்கள் என்றும் உரிமை கோருகின்றது .(இது பற்றி இன்னொரு சந்தர்பத்தில் பார்ப்போம் )இவனே மண்டோதரி என்ற மாதரசியின் தந்தை .இவளுக்கு மயன் வைத்த பெயர் மந்தோதரி .மயன் சிவவணக்கத்தை சிறப்பாக கடைப்பிடிப்பவன் சிவாய நம என்ற மந்திரத்தை தினமும் உச்சரிப்பவன் திருக்கேதீஸ்வரத்தை கட்டியவன் எனவே சிவன் பால் கொண்ட பேரன்பால் மகளையும் சிவ நாமத்தை உச்சரிக்க வேண்டும் என்பதால் மந்தோதரி என்று பெயர் வைத்தான் .ஆனால் வரலாற்று ஆசிரியர்கள் மந்தோதரி என்றால் மெல்லிடையாள் என்று கருத்து கூறி தப்பி செல்கின்றனர் .(பிறந்த குழந்தை மெல்லிடையா மேனி வளர் இடையா என்று பார்த்தா பெயர்வைப்பார்கள் )எதோ பிற்காலத்தில் சிறந்த சிவபக்தையான இவளுக்கும் அரக்கி உருவம் கொடுப்பதற்காய் மண்டோதரி என்று கம்பன் குழுவினர் பெயர் வைத்தனர் .

இராவணன் மன்னார் காடுகளில் வேட்டை ஆட சென்ற தருணம் இளைப்பாறும் வேளையில் வீணையை மீட்டி இசைபாடுவான் அன்றொரு நாள் இராவணன் பாடிய சிவகீதம் வீணையின் சப்த நாளங்களோடு சேர்ந்து வந்து மண்டோதரியின் செவி வழியில் இனிய இன்னிசையாக புகுந்தது காமன் விடு தூது கன்னி மனதை பறித்தது .காதல் வயபட்டாள் தந்தையிடம் இந்த இன்னிசை எங்கிருந்து வருகின்றது என்று கேட்டாள்.தந்தை இசை வந்த திசை சென்று இலங்கை வேந்தனை அழைத்து வந்தார் .இராவணனை கண்டதும் பயந்து நடுங்கினாள் .தந்தை இராவணனின் விருப்பம் அறிந்து இவளை அவனுக்கே திருமணம் செய்து வைத்தார் .திருமண பந்தத்தில் இணைந்து அவனுக்கு தர்ம பத்தினி ஆனாள்,.

இருவருமே சிவ பக்தர்களாகவும் இசையை ரசிப்பவர்கள் ஆகவும் இனிமையாக வாழ்ந்து வந்தார்கள் .அந்த வேளையில் தான் பத்து திசைகளில் தேர் செலுத்தும் வல்லமை உடைய தசரதனுக்கும் கோசல நாட்டு அரசன் பானுமந்தன் மகள் கோசலைக்கும் திருமணம் நிர்சயமாகி இருந்தது அதனை பேசி முடித்தவர் நாரதர். நாரதர் வந்தாலே கலகம் வரும் என்பது பார்வதி பரமேஸ்வரன் குடும்பத்திலேயே நாம் அறிந்திருக்கின்றோம் .இங்கும் அதுபோலவே நாரதர் திருமணத்தை நிற்சயம் செய்துவிட்டு இராவணன் இடம் வந்து இந்த திருமணம் நடந்தால் கோசலைக்கு பிறக்கும் பிள்ளையால் உனக்கு அழிவு நிற்சயம் என்று சொல்கின்றார் .அதேவேளை கோசல நாடு சென்று இராவணனால் இந்த திருமணம் குழப்ப படலாம் என்றும் சொல்கின்றார் .பத்து கிரீடத்துக்கு அரசனான இராவணனோடு போர் புரிய முடியாது என்பதால் கோசல நாட்டில் திருமணத்தை வைக்காமல் கடல் நடுவில் மறையாக திருமணத்தை நடத்த திட்டம் இட்டனர் .கோசலையை தேடி இராவணன் கோசல நாடு சென்று ஏமாந்தான்.வரும் வழியில் கடல் நடுவில் ஒரு நகரம் இருப்பதை காண்கின்றான் அங்கு சென்று கோசலையை கடத்தி வருகின்றான் .பெண்களை வீரர்கள் தாக்க கூடாதது என்பதால் உயிருடனேயே கடத்தி வருகின்றான் தன் தேசம் வந்ததும் அவளை கொலை செய்யும் படி கட்டளை இடுகின்றான் ஆனால் அவனது தர்ம பத்தினி மண்டோதரி அவளை காப்பாற்றி விடுவிக்கின்றாள் ஆனால் தன் கணவன் உயிருக்கு அவள் புத்திரனால் ஆபத்து வர கூடாது என்பதற்காய் தசரதனுக்கு புத்திர பாக்கியம் ஏற்படாதவாறு சாபம் இடுகின்றாள் .ஆனால் விதியை மாற்றி அமைக்க விரும்பாத பார்வதி பரமேஸ்வரர் .மண்டோதரிக்கும் இராவணனுக்கும் உங்களுக்கு பிறக்கும் பெண் குழந்தையாலேயே உங்களுக்கு அழிவு என்று சாபம் இடுகின்றார்கள் .அதனால் தான் மண்டோதரிக்கும் இராவணனுக்கும் பிறக்கும் மூத்த பிள்ளையும் மேகநாதன் அட்சைகுமாரன் ஆகியோரின் அக்காவும் ஆகிய சீதையை ஜனகன் வயல் பூமியில் கொண்டு போய் விடுகின்றார்கள் .

மண்டோதரி கணவனுடையை நன்மைக்காக இழக்க முடியாதவற்றை எல்லாம் வாழ்வில் இழக்கின்றாள்.சீதையை தேடி வந்த அனுமன் கையால் தன் செல்லகுட்டி அக்சயகுமாரன் இறந்த பொழுது கூட கணவனை அவள் கோபிக்கவில்லை .இந்திரனை வென்று சிறை பிடித்து வந்த தன் வீர மகன் இந்திரஜித் இறந்த பொழுது கூட அவள் கணவன் மீது கோபிக்கவில்லை .கணவன் வாழ்வுக்காகவே கடைசிவரை துணை இருந்த மண்டோதரி இன்னொரு பெண்ணுக்காக இரங்கி கோசலையை விடுத்ததால் தன்னால் உயிர்பிச்சை பெற்றுவாழ்ந்த கோசலைக்கு அசுவத்தின் அணுவின் பிறந்த பிள்ளையால் தன் குலமே அழிய தான் காரணமாய் இருந்ததை எண்ணியே கணவன் பிரிவின்போது அந்த மயன் மகள் இந்த பூவுலகை விட்டு இறந்து போகின்றாள் .


,,,,,,, சிவமேனகை ,,,,,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக