அன்பு அண்ணன்
பாலு அவர்களுக்கு பிறந்த நாள் - 04/06/2013.
1970களின்/என் இருபதுகளின் ஆரம்பம். வானொலியில் ஒரு புது ஆண்குரல். சற்று வித்தியாசமாய், இளமையாய் - "ஆயிரம் நிலவே வா"...., ம்ம்ம்ம். சற்று நின்று கேட்கத் தோன்றியது. ஆயிற்று, அதே வேகத்தில் "இயற்கை என்னும் இளைய கன்னி" - அதே குரல் மீண்டும், அதுவும் சுசீலா அம்மாவுடன்.
கொஞ்சம் அந்தக் குரலுடன் சேர்ந்து பாடிப் பார்த்தேன். குதூகலமாய் இருந்தது. நண்பர்களும் "டேய், பாடுடா, அந்தப் பாட்டை பாடுடா" என்று உசுப்பேத்தவும், விவாதிக்கவும் ஆரம்பித்தார்கள்.
மீண்டும் "வெற்றி மீது வெற்றி வந்து" - துள்ளிக் குதித்த அந்தக் குரல் என்னை கொஞ்சம் கொஞ்சமாய் ஆக்கிரமிக்க ஆரம்பித்தது. தொடர்ந்து, "இறைவன் என்றொரு கவிஞன்", "அவள் ஒரு நவரச நாடகம்", "ஆயிரம் நிலவு ஆயிரம் கனவு", "மாதமோ மார்கழி", "நினைத்தால் நான் வானம் சென்று" என்று தொடர்ந்த குரல் - "பாடும்போது நான் தென்றல் காற்று" என்று பாடி என்னை அங்கிங்கு அசையமுடியாதபடி ஆட்டிப்படைத்தது.
வெளிவந்த பாடல்களிலெல்லாம் உற்சாகம், துள்ளல், சில்மிஷம். சுசீலா அம்மா, ஈஸ்வரி அம்மா, ஜானகி அம்மா என்று ஜோடிப் பாடல்களாக, டி.எம்.எஸ். சார், ஜேசுதாஸ் அண்ணா என்று சக பாடகர்களோடும் துணைப் பாடல்களாக அந்தக் குரல் வெள்ளம் கரை புரண்டது. எல்லா இசை அமைப்பாளர்களின் இசையிலும் புது வெள்ளம்.
"டேய் மச்சான், இன்னிக்கி பாலு சாரோட புதுப்பாட்டு ரேடியோவிலே, கேட்டியா" இப்படி தேடித் தேடி ரசிக்க ஆரம்பித்தோம். 1980, 1990, 2000 தசாப்தங்களைக் கடந்து, தன் ஒப்பற்ற குரலால் தமிழிசை உலகமெல்லாம் வியாபித்து புகழ் பூத்த அன்பு அண்ணா பத்மஸ்ரீ எஸ். பி. பாலசுப்ரமணீயம் அவர்களின் பிறந்த நாள் இன்று. 04/06/2013.
மோதிரக் கைகளாம் மெல்லிசை மன்னரின் கைகளாலும், மக்கள் திலகத்தின் கைகளாலும் அறிமுகப்படுத்தபட்ட அந்த இசை நாயகன் இன்று சர்வதேச அரங்கில் ஒரு முத்தமிழ்ப் பாடகன். அவரின் பாடல்களுக்கு விளக்கம் சொல்வதானால் ஒரு 'தீஸிஸ்' எழுத வேண்டி இருக்கும். அதையும் இப்போதே, ஒரு சில நிமிடங்களில் எழுதியும் விடுவேன். ஆனால் அதற்கு அவசியமே இல்லை. ஏனென்றால், அந்த பாடல் வெண்ணிலாவை எந்த மேகமும் மறைக்க முடியாது. அது குன்றின் மேல் இட்ட தீபம். தமிழ் இசை உலகின் இன்னொரு சகாப்தம்.
பாலு அண்ணா, நான் சந்திக்கத் துடித்துக்கொண்டிருக்கும் இசை மேதைகளின் பட்டியலில் உங்களுக்கும், சுசீலா அம்மாவுக்கும் முதலிடம். நிச்சயம் அந்த பாக்கியம் விரைவில் கிட்டும் என்ற நம்பிக்கையோடு - உங்களை விட வயதில் சிறியவன். உங்களை வாழ்த்த வயதில்லை எனக்கு. வணங்குகிறேன். உங்களுக்கு சகல நலங்களையும் எல்லாம் வல்ல இறைவன் அருளப் பிரார்த்திக்கின்றேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக