அமிழ்தினும் இனிய தமிழில் சில சொற்கள்:
வேட்கைத்துணைவி = மனைவி.
வேட்கைப்பெருக்கம் = காமநோய்.
வேட்டான் = நண்பன் : திருமணமானோர் : கணவன் : விரும்புபவன்.
வேலைக்காரி = பணிப் பெண்.
வேலையாள் = கூலிக்குப் பணி செய்யும் ஆள்
வேலசம் = மிளகு.
வேலம் = தோட்டம்.
வேலன் = முருகக் கடவுள்.
வேலாயுதன் = முருகக் கடவுள் : வேற்படையுடையவன்.
வேலாவலயம் = கடல் : பூமி.
வேலி = பாதுகாப்பு அரண் : வயல் : காவல்.
வேலிப் பருத்தி = உத்தாமணிக் கொடி.
வேலை = செயல் : தொழில் : கடல் : கானல் : கரும்பு : வெண்காரம் : அலை : கடற்கரை.
வேழம்பம் = வஞ்சகம் : ஏளனம்.
வேள்வி = யாகம் : ஒமகுண்டம் : பூசனை : கலியாணம் :
புண்ணியம் : மகநாள் : ஈகை.
வேள்விக் கபிலை = யாகத்துக்குப் பால் முதலியவற்றை உதவும் பசு.
வேள்வியாளன் = கொடையாளன் : பார்ப்பான்.
வேள்வியின் பதி = திருமால்.
வேழம்பர் = கழைக்கூத்தர் : கேலி செய்வோர்.
வேளாண் வேதம் = நாலடியார்.
வேளாவளி = ஒரு பண்.
வேளாளன் = குயவன்.
வேற்றாள் = அயலார்.
வேற்றான் = அயலான்.
வேற்றுப் புலம் = பகையிடம்: அயலான இடம்.
வேண்டுதல் = வாங்குதல் : வேண்டிக் கேட்டல்.
தமிழ்ச் சொற்கள் பெரும்பாலும் எழுப்பப்பட்ட ஓசைகளின் சொற்களாகவே காணப்படுகின்றன. கூ என்று கூவிய கூகை, குர்குர் என ஒலித்த குரங்கு , கர் கர் என உறுமிய கரடி, சர சர வென ஓடிய சாரை என பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்.
இவ்வகையில் அம்மா என்ற சொல்லும் இயற்கையில் தோன்றிய ஒன்றாகும். பிறந்த குழந்தை அழுவதும் சிரிப்பதுமாக வாயை மூடி மூடித்,திறக்கின்றது.குழந்த
அம்மா இயற்கையாகவே தோன்றிய சொல்லாகும். அம்ம ,அம்மு ,அம்மை போன்ற சொற்கள் அம்மா என்ற சொல்லுக்குப் பிறகு தோன்றியவைகள்.தாய் என்ற சொல் ஆய் என்ற சொல்லின் நீட்சியாகும். ஆய்=அம்மா பாட்டி, பாலமுதைத் தந்த ஆய் தாய் எனப்பட்டாள். குழந்தையை அள்ளி எடுத்து அணைக்கும் தாய் அன்னையெனப்பட்டாள்.
ஆய் ,தாய் ,அன்னை ,அம்மை ஆகியவைகள் யாவும் பிற்காலச் சொற்களே.அம்மா+ஆய்ச்சி=அம்ம
, தமிழ் -கருத்துக்களம்-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக