மூளை..!
நம்ம மூளை வேலை செய்யாமல் இருக்க காரணங்கள்............
1. புகைப்பிடிப்பதால், நுரையீரல் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. மூளையில் உள்ள
சுருக்கங்கள் அதிகரிப்பதோடு,
அல்சீமியர் நோயை உண்டாக்கும்.
2. உணவை தவிர்த்தால் ,இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவானது குறைந்து
மூளைக்கு போதிய ஊட்டச்சத்துக்கள்
கிடைக்காமல், மூளையின் செயல்பாடானது
தடைபட ஆரம்பிக்கும்.
3. அதிகமாக சாப்பிடுவது மூளைத்
தமனிகளை கடினமடையச் செய்து,
ஞாபக சக்தியை குறைத்துவிடும்.
4. அளவுக்கு அதிகமாக சர்க்கரை சாப்பிட்டால், புரோட்டீன் மற்றும் இதர சத்துக்கள்
உடலில் உறிஞ்சாமல், ஊட்டச்சத்து
குறைபாட்டை உண்டாக்கி, மூளை வளர்ச்சியை
தடை செய்யும்.
5. உடலில் ஆக்ஸிஜனை அதிகம் உறிஞ்சுவது
மூளை என்பதால் மாசுபட்ட காற்றினை
சுவாசிக்கும் பொழுது , மூளையின்
செயல்திறனானது குறைந்துவிடும்.
6. நல்ல தூக்கம் இல்லாவிட்டால், மூளையில்
உள்ள செல்கள் இறக்க நேரிடும். மேலும்
தூங்கும் போது முகத்தை போர்வையால்
போர்த்திக் கொண்டு தூங்கக் கூடாது.
ஏனெனில் பின் மூளைக்கு வேண்டிய
ஆக்ஸிஜன் கிடைக்காமல், மூளையானது பாதிக்கப்படும்.
7. உடல் நலம் சரியில்லாத நேரத்திலும் வேலை செய்தாலோ அல்லது படித்தாலோ மூளை பாதிக்கப்படும்.
8. குறைவாக பேசினால் மூளையின் செயல்திறனும் குறையும் . அதிகமாக பேசுவதன் மூலம் மூளையின் செயல்திறனை மேம்படுத்த முடியும்....
இனிமே யாரையாவது மூளை இல்லையானு
கேக்கறதுக்கு முன்னாடி யோசிங்க , இதுல
ஏதாவது ஒரு பழக்கம் அவங்களுக்கு
இருக்குமோனு......... உடனே புத்திசாலித்தனமா
என்னை கேக்காதிங்க, இதுல எந்த பழக்கமும்
எனக்கு இல்லை..
, தமிழ் -கருத்துக்களம்-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக