தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 21 நவம்பர், 2016

இந்த தவறு செய்தால் எண்ணெய் சட்டியில் வறுத்தெடுப்பார்கள்!

பாவங்களை செய்தவர்கள் நரகத்தில் வீழ்ந்து மிகவும் துன்புறுவார்கள். ஒருவன் யாருக்கும் தீமையே செய்யாமல் நன்மை செய்து இறந்தால் அவன் சர்வ சத்தியமாக சொர்க்கலோகத்தையே அடைவான்.
அதன் பிறகு நல்ல திருத்தலத்தில், உயர்ந்த குலத்தில் பிறந்து சிறப்புடன் வாழ்வான்.
கருடனே! இந்த புராணத்தை தந்தை இறந்த காலத்தில் தீட்டு நீங்குவதற்குள் ஒருவன் கேட்டால், இறந்த தந்தை மோட்சத்தை அடைவான்.
தாய் இறந்த போது இந்த புராணத்தை கேட்டால், இறந்த தாய் சொர்க்கத்தை அடைவாள். இதைத்தவிர தை மாத விக்ஷூ புண்ணிய காலத்திலும், கிரகண காலத்திலும், திவச காலத்திலும் இந்த புராணத்தை படித்தாலும், கேட்டாலும் நல்லுலகை அடைவான்.
அதுபோன்று மண்ணில் வாழும் நாட்களில் நாம் செய்யும் பாவங்கள் அனைத்திற்கும் கிடைக்கும் தண்டனைகள் குறித்து கருடபுராணத்தில் விளக்கமாக கூறப்பட்டுள்ளது.
அதில் ஒரு தண்டனைதான் கும்பிபாகம்
கும்பிபாகம் என்பது உணவுக்காக வாயில் உயிர்களை வதைப்பதற்காக கிடைக்கும் தண்டனையாகும். வாழ்வில் பணம் ஈட்ட வேண்டும் என்ற குறிக்கோளோடு வாயில்லா உயிர்களை கொன்று வதைப்பதோடு மட்டுமல்லாமல் அந்த உணவினை சுகாதாரமற்ற முறையில் தயாரித்து வழங்குவதால் மனிதர்களின் உடல்நலத்திற்கு கேடுகள் உண்டாகின்றன.
ருசிக்காக, எவ்வாறு மனித உயிர்களை கொன்று, எண்ணெய்யில் போட்டு சமைக்கிறோமோ, அதே போன்று நரகத்தில் உங்களையும் எண்ணெய்யில் போட்டு பொரித்தெடுப்பார்கள். வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளான நாய், பூனை என கண்களில் தென்படும் வாயில்லா விலங்கினங்களை சித்ரவதை செய்து உணவாக உட்கொள்ளாதீர்கள்.
அதனையும் ஒரு உயிராக கருத வேண்டும் என்பதையே கருடபுராணம் சுட்டிக்காட்டுகிறது. வாயில்லா உயிர்களை வதைத்தும் கொன்றும் பலவிதங்களில் கொடுமைப்படுத்தும் பாவிகள் அடையும் நரகம் இது. எரியும் அடுப்பில் வைக்கப்பட்டுள்ள எண்ணெய்க்கொப்பறையில் போட்டு, எமதூதர்கள் பாவிகளைத் துன்புறுத்துவார்கள்.
எனவே, வாயில்லா உயிர்களை சித்ரவதை செய்வதை நிறுத்துங்கள். இல்லையெனில் உங்களுக்கும் எண்ணெய் கொப்பறை தண்டனைதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக