தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 31 ஜூலை, 2017

அதிகாலையில் இதை மட்டும் சொன்னால் நிச்சயம் நீங்கள் நினைப்பதெல்லாம் நடக்கும்…!

கல் உப்பு ஒரு வரப்பிரசாதம். அதிகாலையில் எழுந்ததும் இரண்டு கைகளிலும் கல் உப்பை வைத்து கிழக்குப் புறமாகப் பார்த்து அமர்ந்து கொள்ள வேண்டும். மடியில் ஒரு ஒயிட் பேப்பரை வைத்துக் கொள்ள வேண்டும்.
கைகளில் உப்பை இறுக்கமாக மூடிக்கொள்ள வேண்டும். அதன்பின் உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை மனதுக்குள்ளாகவோ அல்லது வாய்விட்டோ அந்த விஷயங்களை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். பத்து நிமிடங்கள் வரை சொல்ல வேண்டும். உதாரணமாக,
மாமியார் பிரச்னை என்றால் உப்பை கையில் வைத்துக் கொண்ட பின், எனக்கும் என் மாமியாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம். என் மாமியார் மிகவும் நல்லவர். நான் அவரைப் புரிந்து கொண்டேன். அவருக்கு உண்மையிலேயே என் மீது பாசம் அதிகம் என்று சொல்ல வேண்டும்.
பணப்பிரச்னை இருந்தால், கண்ணை மூடிக்கொண்டு, எனக்கு நிறைய பணம் கிடைக்கும். என்னுடைய கஷ்டங்கள் பனி போல விலகிவிடும் என்று திரும்பத் திரும்ப பத்து நிமிடங்கள் வரை சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும்.
உடம்பில் ஏதாவது பிரச்னையென்றால், உடம்பில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. நான் மிகுந்த ஆரோக்கியத்துடன் இருக்கிறேன் என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருக்கிறோம்.
இறுதியாகச் செய்ய வேண்டியது : என்ன பிரச்னையோ அது சரியாகிவிட வேண்டுமென்று வாய்விட்டு பத்து நிமிடங்கள் வரை சொல்லி முடித்ததும் கையில் வைத்திருக்கும் உப்பை மடியில் உள்ள பேப்பரில் போட்டு நன்றாக மடித்து, அதை ஓடும் தண்ணீரில் விட்டுவிட வேண்டும்.
இப்படி செய்தால் பிரச்னைகள் தீர்ந்துவிடுமா என்று நாம் நினைக்கலாம். இது புதிய முறையெல்லாம் கிடையாது. காலங்காலமாக நம்முடைய முன்னோர்கள் பின்பற்றி வந்த முறை தான் உப்பைக் கொண்டு பிரச்னையைப் போக்குவது.
திருஷ்டி சுத்தும்போதும் மந்திரிக்கும் போது உப்பை வைத்து சுற்றிப் போடுவதைப் பார்த்திருப்போம்.
அதேபோல் சில கோயில்களில் பிரச்னைகள் தீர வேண்டும் என்பதற்காக உப்பை வாங்கிக் கொண்டுபோய் கொட்டுவார்கள்.
பாவம் தீர வேண்டுமென்பதற்கு ஏன் உப்பு நிறைந்த கடல் நீரில் சென்று குளிக்கிறோம்… ஈமக்கிரியை செய்கிறோம்… சிறிது யோசித்துப்பாருங்கள்.
இதையெல்லாம் மூட நம்பிக்கை என்று புறம் தள்ளிவிடாதீர்கள். இதற்குள் இருக்கும் அறிவியலை சற்று புரிந்து கொள்ளுங்கள்.
அறிவியலில் இதை ஓரா சயின்ஸ் என்று சொல்வார்கள். எதிர்மறை சக்தி ( negative energy) நேர்மறை சக்தி (positive energy) என்ற இரண்டும்தான் நம்முடைய வாழ்க்கையை வழிநடத்திச் செல்லும்.
உப்பு எதிர்மறை சக்தியை வெளியேற்றும் ஒரு பொருள். கைக்குள் உப்பை வைத்துக் கொண்டு நேர்மறையாகப் பேசினால் உடலில் நேர்மறை சக்தி அதிகரிக்கும். நேர்மறை அலைக்கற்றைகள் நம்மைச் சுற்றி பரவ ஆரம்பிக்கும்.
இன்னும் நம்முடைய கிராமங்களில் உப்பை கடன் வாங்கமாட்டார்கள். அப்படியே வாங்கினாலும் கைகளில் வாங்கமாட்டார்கள். அப்படி வாங்கினால் உப்பை கொடுப்பவர்களிடம் இருக்கும் எதிர்மறை சக்தி மற்றவர்களிடம் வந்துவிடும் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருக்கிறது.
http://www.manithan.com/health/04/134084

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக