தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 19 ஜூலை, 2017

சொட்டையில் முடி வளர்ச்சியை தூண்டும் பொருட்கள் இவைதான்

மரபணு, மன உளைச்சல், ஊட்டச்சத்து குறைப்பாடு போன்ற பல காரணத்தினால், முடியின் வளர்ச்சி குறைந்து, சொட்டை பிரச்சனையை சந்திக்க நேரிடுகிறது.
சொட்டையில் முடி வளர்ச்சியை தூண்டும் பொருட்கள்?
  • ஆலிவ் ஆயிலை சூடு செய்து, அதில் தேன் மற்றும் பட்டைப் பொடியை கலந்து தலையில் மசாஜ் செய்து, 1/2 மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.
  • வெந்தயம் மற்றும் சீரகத்தை ஊறவைத்து, கருவேப்பிலையுடன் சேர்த்து அரைத்து, 15 நாட்கள் தொடர்ந்து தலையில் தடவி வந்தால், கூந்தல் வளர்ச்சி அதிகமாகும்.
  • சின்ன வெங்காயத்தை அரைத்து அதனுடன் சிறிது தேன் கலந்து தலையில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால், நல்ல பலனைக் காணலாம்.
  • எலுமிச்சை விதைகள், மிளகு, ஆகிய இரண்டையும் சேர்த்து நன்றாக பொடி செய்து, அதை சொட்டை உள்ள இடத்தில் தடவ வேண்டும். இதை தினமும் இருமுறை செய்தால், சொட்டையில் முடி வளரும்.
  • விளக்கெண்ணெய்யை சூடுபடுத்தி, கற்பூரத்தை பொடி செய்து அதில் கரைத்து தலையில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். இதை வாரத்திற்கு 4 நாட்கள் செய்ய வேண்டும்.
http://news.lankasri.com/beauty/03/129050

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக