தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 4 ஜூலை, 2017

ஞாபகத் திறண் மேம்படணுமா?

நினைவுத்திறனை அதிகரிக்க நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை தவிர்க்கவும்.
கடல் உணவுகள்
கடல் வகை உணவுகளில் மெர்குரி அதிகம் உள்ளது. எனவே சூரை மீன் மற்றும் இதர மீன்களை வாரத்திற்கு மூன்று முறைக்கு அதிகமாக சாப்பிட்டால், புலனுணர்வு செயல் பிறழ்ச்சி ஏற்படும் அபாயம் உள்ளது.
எண்ணெய் உணவுகள்
கொழுப்புகள் நிறைந்த எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவ்வகை உணவுகள் நினைவுத்திறனை குறைக்கும்.
சர்க்கரை உணவுகள்
சர்க்கரை அதிகம் உள்ள உணவு வகைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதனால் நரம்பு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதுடன், நினைவுத் திறனும் குறையும்.
உப்பு உணவுகள்
உப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால், உடலில் சோடியத்தின் அளவு குறைந்து, இதயத்தின் ஆரோக்கியம் மற்றும் நினைவுத் திறன்கள் பாதிப்படையும்.
பிட்சா
பிட்சா, பாஸ்தா போன்றவற்றில் சேர்ந்துள்ள சீஸில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகமாக உள்ளது. எனவே இவ்வகை உணவுகளை அதிகம் சாப்பிட்டால், நினைவுத் திறன் குறைந்துவிடும்.
http://news.lankasri.com/food/03/128096

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக